- Home
- இந்தியா
- அடிப்பாவி! இவ தாயா? இல்ல பேயா! க...காதலனுக்காக பெற்ற மகளையே துடிக்க துடிக்க முடித்த கொடூரம்!
அடிப்பாவி! இவ தாயா? இல்ல பேயா! க...காதலனுக்காக பெற்ற மகளையே துடிக்க துடிக்க முடித்த கொடூரம்!
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து தாய் கொன்று புதைத்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது.

தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கள்ளக்காதலுக்காக கணவன் அல்லது குழந்தைகளை கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து தாய் கொன்று புதைத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (33). இவரது மனைவி மம்தா (26). இந்த தம்பதிக்கு 4 வயதில் மகனும், 3 வயதில் தனுஸ்ரீ என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதல்
இதனால் கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் சப்ஷாபள்ளியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மம்தா, தனது மகனை பெற்றோரிடம் விட்டுவிட்டு மகள் தனுஸ்ரீயை அழைத்துக்கொண்டு, கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை எப்படியோ இந்த விஷயத்தை அறிந்த கணவர் கடந்த மாதம் 27ம் தேதி சிவம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணை
இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். ஆனால் குழந்தை தனுஸ்ரீ மட்டும் காணவில்லை. இதுதொடர்பாக குழந்தையின் தாய் மம்தாவிடம் போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
தாய் கைது
அதாவது உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த தனுஸ்ரீயை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று, குழி தோண்டி புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை புதைத்த இடத்தை மம்தா காண்பித்ததை அடுத்து சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மம்தா மற்றும் பயாஸ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.