- Home
- இந்தியா
- அசுர வேகத்தில் வந்த BMW கார்! சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட மத்திய நிதியமைச்சக அதிகாரி பலி! மனைவியின் நிலை?
அசுர வேகத்தில் வந்த BMW கார்! சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட மத்திய நிதியமைச்சக அதிகாரி பலி! மனைவியின் நிலை?
டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொருளாதார விவகாரத்துறை துணை செயலர் நவ்ஜோத் சிங், BMW கார் மோதியதில் பலியானார். அவரது மனைவி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார விவகாரத்துறையின் துணை செயலர்
டெல்லியில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரத்துறையின் துணை செயலர் நவ்ஜோத் சிங். இவர் தனது மனைவியுடன் பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ரிங் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவரது இருசக்கர வாகனத்தின் மீது அசுர வேகத்தில் வந்த பிஎம்டபுள்யூ கார் மோதியது.
பிஎம்டபுள்யூ கார்
இதில் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நவ்ஜோத் சிங் மற்றும் அவரது மனைவியை ஜிடிபி நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நவ்ஜோத் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவி படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜிடிபி நகர் மருத்துவமனை
இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்காமல் 20 கி.மீ தொலைவில் உள்ள போதிய வசதியில்லாத ஜிடிபி நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என மகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தௌலா குவானுக்கு அருகில் பல சிறப்பு மருத்துவமனைகள் மற்றும் AIIMS கூட உள்ளன, அவர்கள் அங்கு அனுப்பப்பட்டிருந்தால், எனது தந்தையை காப்பாற்றியிருக்க முடியும் என்று கூறினார்.
போலீஸ் பாதுகாப்பு
பிஎம்டபுள்யூ காரை பெண் ஒருவர் ஒட்டி வந்துள்ளார். அவரும், அவரது கணவரும் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.