- Home
- Tamil Nadu News
- அடச்சீ! இப்படியும் ஒரு அப்பனா! சொல்லும் போதே நாக்கு கூசுது! அதுவும் பெத்த மகளையே..!
அடச்சீ! இப்படியும் ஒரு அப்பனா! சொல்லும் போதே நாக்கு கூசுது! அதுவும் பெத்த மகளையே..!
School Girl pregnancy: பொள்ளாச்சி அருகே 15 வயது சிறுமி கர்ப்பமான சம்பவத்தில், வளர்ப்பு தந்தை மற்றும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவியை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

11ம் வகுப்பு படித்து வந்த மகள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த (58) வயதான கூலி தொழிலாளி. பெண் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவரை திருமணம் செய்து வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். இவரது 15 வயது வளர்ப்பு மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பரிசோதனையில் சிறுமி கர்ப்பம்
இந்நிலையில் மாணவி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை சற்று எதிர்பாராத தாய் அதிர்ச்சி அடைந்தார்.
மகளிர் காவல்நிலையத்தில் புகார்
இதுகுறித்து சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்ற போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றிய கவியரசன்(21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பல்வேறு இடங்களுக்கு கவியரசன் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தந்தை, காதலன் கைது
இந்த விவகாரம் வளர்ப்பு தந்தைக்கு தெரிய வந்ததை அடுத்து அவரும் மாணவியை மிரட்டி, மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தை மற்றும் காதலன் கவியரசன் இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.