MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • செப்டம்பரில் செம மழை கொட்டித் தீர்க்க போகுது! வானிலை மையம் எச்சரிக்கை!

செப்டம்பரில் செம மழை கொட்டித் தீர்க்க போகுது! வானிலை மையம் எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. செப்டம்பரில் சராசரியை விட 109% அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : SG Balan
Published : Aug 31 2025, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வானிலை மையம் எச்சரிக்கை
Image Credit : Getty

வானிலை மையம் எச்சரிக்கை

இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதத்தில் வழக்கம் போலவே அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் வெள்ளம், மேக வெடிப்பு, நிலச்சரிவு எனப் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

23
அதிக மழைப்பொழிவு
Image Credit : Getty

அதிக மழைப்பொழிவு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியைவிட 109% அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் மாத கனமழையால் உத்தரகாண்ட், டெல்லி, தெற்கு ஹரியானா, மற்றும் வட ராஜஸ்தானில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Articles

Related image1
சென்னை டூ கோவை.. செப்டம்பர் 3 வரை கொட்டித்தீர்க்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்!
Related image2
சென்னையில் மேகத்தை உடைத்து மொத்தமாக கொட்டிய கனமழை! 1 மணி நேரத்தில் 16 செமீ! வானிலை நிபுணர்கள் வார்னிங்!
33
செப்டம்பரில் மழை அதிகரிப்பு
Image Credit : iSTOCK

செப்டம்பரில் மழை அதிகரிப்பு

1980 முதல் செப்டம்பர் மாதத்தில் மழையின் அளவு அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை விலகும் தேதி செப்டம்பர் 1-ல் இருந்து செப்டம்பர் 17 ஆக மாற்றப்பட்டதும் இதற்கு ஒரு சான்றாகும்.

இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, இந்தியாவில் 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, இது இயல்பை விட 6% அதிகம். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் வடமேற்கு இந்தியா மற்றும் தீபகற்ப தென்னிந்தியாவில் வழக்கத்தை விட 31% அதிக மழை பெய்துள்ளது.

இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, மாநில அரசுகளும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளும் உஷார் நிலையில் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
மழை செய்திகள்
வானிலை
இந்தியா
வெள்ளம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Related Stories
Recommended image1
சென்னை டூ கோவை.. செப்டம்பர் 3 வரை கொட்டித்தீர்க்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்!
Recommended image2
சென்னையில் மேகத்தை உடைத்து மொத்தமாக கொட்டிய கனமழை! 1 மணி நேரத்தில் 16 செமீ! வானிலை நிபுணர்கள் வார்னிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved