இந்தியாவில் வாட்டி வதைக்கும் வெயில்! வெப்ப அலை எச்சரிக்கை! எங்கெல்லாம் வெயில் அதிகம்?
நாடு முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Heat wave warning in India: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் என அனைத்து மாநிலங்களிலும் வெயில் வாட்டி வருகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாகர்கோவில் அனைத்து இடங்களிலும் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வருகிறது.
Heat Wave, India
இந்நிலையில், இந்தியாவில் இன்று குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகப்பட்ச வெப்ப நிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் அதிகபட்ச வெப்பநிலை 44.0 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5 டிகிரி அதிகமாகும்.
ராஜஸ்தானில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வெப்ப அலையின் தீவிரம் மற்றும் பரவல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஜோத்பூர், பிகானீர் மற்றும் ஷேகாவதி பகுதிகளின் பல பகுதிகளை பாதிக்கும். சில பகுதிகளில், தீவிர வெப்ப அலை நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, குறிப்பாக எல்லை மாவட்டங்களில் வெப்பநிலை 45-46 டிகிரியை எட்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம் சொன்ன டேஞ்சர் அலர்ட்! மழைக்காகவா? வெயிலுக்காக? இதோ முழு தகவல்!
Summer, Heat
ராஜஸ்தான் மட்டுமின்றி குஜராத்தின் வதோரவில், அகமதாபாத்தில், ராஜ்கோட் ஆகிய மாநிலங்களில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. மகாராஷ்டிராவில் நந்தத், துலே, பில்வாரா ஆகிய இடங்களில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டியுள்ளது. இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தலைநகர் டெல்லியிலும் மிக அதிகமான வெப்பநிலை வாட்டியுள்ளது. நாட்டின் எந்த பகுதியையும் வெயில் விட்டு வைக்கவில்லை. குளுமையான காலநிலைக்கு பெயர் பெற்ற நாட்டின் தொழில்நுட்ப தலைநகரமான பெங்களூருவில் வழக்கத்துக்கு மாறாக 35 டிகிரிக்கு மேல் வெயில் பாடாய்படுத்துகிறது.
Indian Meteorological Department, Heat Wave
அடிக்கடி மழை பெய்யும் கேரளாவையும் வெயில் விட்டுவைக்கவில்லை. அங்குள்ள திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு என அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் கோரத்தாண்டவம் அதிகமாக உள்ளது. இது மட்டுமின்றி மும்பை, ஹைதராபாத் என முக்கியமான நகரங்களிலும் வெயில் வாட்டுகிறது.
இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கடுமையான வெபப் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் உச்சக்கட்ட மதிய நேரங்களில் வீட்டிலேயே இருக்கவும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவிறுத்தியுள்ளது.
Heat Wave: 3 மாசம் வெளியே போயிடாதீங்க! வானிலை ஆய்வு மையம் அலர்ட்! உஷார் மக்களே!