MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Heat Wave: 3 மாசம் வெளியே போயிடாதீங்க! வானிலை ஆய்வு மையம் அலர்ட்! உஷார் மக்களே!

Heat Wave: 3 மாசம் வெளியே போயிடாதீங்க! வானிலை ஆய்வு மையம் அலர்ட்! உஷார் மக்களே!

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்ப அலை கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Mar 31 2025, 08:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Heat wave in India: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைபிரதேசங்களை தவிர மற்ற தலைநகர் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாகர்கோவில் அனைத்து இடங்களிலும் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வருகிறது. குளுமையான காலநிலைக்கு பெயர் பெற்ற நாட்டின் தொழில்நுட்ப தலைநகரமான பெங்களூருவில் வழக்கத்துக்கு மாறாக 35 டிகிரிக்கு மேல் வெயில் பாடாய்படுத்துகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Heat Wave

Heat Wave

அதிகமான மலைகளையும், ஆறுகளையும் கொண்டுள்ள 'கடவுளின் தேசம்' எனப்படும் கேரளாவையும் வெயில் விட்டுவைக்கவில்லை. அங்குள்ள திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு என அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் கோரத்தாண்டவம் அதிகமாக உள்ளது. இது மட்டுமின்றி டெல்லி, மும்பை, ஹைதராபாத் என முக்கியமான நகரங்களிலும் வெயில் வாட்டுகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கடுமையான வெபப் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், ''ஏப்ரல்–ஜூன் மாதங்களில், இந்தியாவில் வழக்கமாக 4–7 வெப்ப அலை நாட்கள் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அது 2–4 நாட்கள் என அதிகமாக இருக்கும். கிழக்கு இந்தியாவில் வெப்ப அலை 10 நாட்கள் வரை கூட செல்லக்கூடும்'' என்றார். தொடர்ந்து பேசிய அவர், ''ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் வழக்கமாக 1–3 நாட்கள் வெப்ப அலைகள் இருக்கும். இந்த ஆண்டு அது 3–6 நாட்கள் வரை கூடுதலாக இருக்கலாம்'' என்று தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையத்துக்கு ரூ.226 கோடி வருவாய்! எப்படி வருது தெரியுமா?

34
Heat Wave in india

Heat Wave in india

ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகள் ஆகியவை இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்களைக் காண வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எல் நினோ–தெற்கு அலைவு அடுத்த மூன்று மாதங்களுக்கும், பருவமழைக் காலத்திலும் நடுநிலையாக இருக்கும் என்றும் எல் நினோ உருவாக வாய்ப்பே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மழைப்பொழிவைப் பொறுத்தவரை வடமேற்கு இந்தியா, மேற்கு மத்திய இந்தியா, தீபகற்ப இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பானதை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

44
summer, India

summer, India

மார்ச் 2025 இல் அகில இந்திய அதிகபட்ச வெப்பநிலை 1901 க்குப் பிறகு 14 வது அதிகபட்சம் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 வது அதிகபட்சம் என்றும் சராசரி வெப்பநிலை 11 வது அதிகபட்சம் என்றும்  ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியுள்ளார். இந்த கோடை காலத்தில் 9 முதல் 10 சதவிகிதம் வரையிலான உச்ச மின்சார தேவை வளர்ச்சிக்கு இந்தியா தயாராக வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு மே 30 அன்று அகில இந்திய உச்ச மின்சார தேவை 250 ஜிகாவாட் (GW) ஐ தாண்டியது. இது கணிப்புகளை விட 6.3 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீருக்குச் செல்லும் முதல் வந்தே பாரத் ரயில்! பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வெப்ப அலை
இந்தியா
கோடைக்காலம்
தமிழ்நாடு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Governance : விவாதத்திற்கு பதில் கூச்சல் : இளைஞர்களுக்கு புதிய இந்தியா தரும் பாடம்!
Recommended image2
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் ஃபார்ச்சூனர் கார் பரிசு... 6 வயது பேரனுக்காக பாட்டி அடித்த ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved