காஷ்மீருக்குச் செல்லும் முதல் வந்தே பாரத் ரயில்! பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத் ரயில் ஏப்ரல் 19ல் தொடங்குகிறது. பிரதமர் மோடி கத்ராவில் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான பயண நேரம் குறையும்.

Kashmir's first Vande Bharat train
காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத் ரயில்:
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கும் வகையில், ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து ரயில் பயணத்தைத் தொடங்கி வைக்க உள்ளார் . ஜம்மு ரயில் நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதால், ரயில் கத்ராவிலிருந்து புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
272 கிலோமீட்டர் நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு ஜம்மு-கத்ரா-ஸ்ரீநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட உள்ளது. கத்ரா-பாரமுல்லா பாதையில் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த வழித்தடத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வானிலை ஆய்வு மையத்துக்கு ரூ.226 கோடி வருவாய்! எப்படி வருது தெரியுமா?
Kashmir Vande Bharat Express
பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்:
இந்தப் புதிய சேவை ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக இந்தப் பிராந்தியத்திற்கு அதிவேக ரயில் சேவை கிடைக்க உள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஞாயிற்றுக்கிழமை ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பிரதமர் மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி உதம்பூருக்கு வருவார். உலகின் மிக உயரமான ரயில் பாலத்தைப் பார்வையிட்டு அதைத் திறந்து வைப்பார். அதன் பிறகு, கத்ராவிலிருந்து வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்'' என்று கூறினார்.
PM Modi on Vande Bharat Express
நிறைவேறும் நீண்டகாலக் கோரிக்கை:
காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு நேரடி ரயில் சேவை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக புதிய ரயில் சேவை தொடங்கப்படுகிறது. தற்போது, இயக்கப்படும் ரயில் சேவைகள் சங்கல்தானையும் பாரமுல்லாவையும் மட்டுமே இணைக்கின்றன. கத்ராவில் இருந்துதான் இந்தியாவின் பிற இடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விர்சுவல் கிரெடிட் கார்டு என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
Kashmir Vande Bharat Express Ticket Fare
சவால்கள் நிறைந்த வழித்தடம்:
காஷ்மீரை ரயில் நெட்வொர்க் மூலம் இணைக்கும் திட்டம் 1997 இல் தொடங்கப்பட்டது. ஆனால் சிக்கலான நிலப்பரப்பு, பொறியியல் சிக்கல்கள் மற்றும் பாதகமான வானிலை காரணமாக பல ஆண்டுகளாக இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பாதை 38 சுரங்கப்பாதைகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 119 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாதையில் T-49 என்ற சுரங்கப்பாதை இந்தியாவின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதையாகும். இது 12.75 கி.மீ. நீளம் கொண்டது.
இந்தப் பாதையில் பிரபலமான செனாப் பாலம் உள்பட 927 பாலங்களும் உள்ளன. அவை 13 கி.மீ.க்கு மேல் நீள்கின்றன. செனாப் பாலம் ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமாகும். ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தடுப்பூசி மைத்ரி: மீண்டும் பிரதமர் மோடியைப் பாராட்டிய சசி தரூர்!