MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வானிலை ஆய்வு மையத்துக்கு ரூ.226 கோடி வருவாய்! எப்படி வருது தெரியுமா?

வானிலை ஆய்வு மையத்துக்கு ரூ.226 கோடி வருவாய்! எப்படி வருது தெரியுமா?

இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), புவி அறிவியல் அமைச்சகத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்டித் தரும் நிறுவனமாக மாறியுள்ளது. 2022-23 முதல் ரூ.226 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது.

2 Min read
Author : SG Balan
Published : Mar 31 2025, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
metrological

metrological

இந்திய வானிலை ஆய்வுத் மையம் (IMD) பொதுமக்களுக்கு வானிலை தொடர்பான அறிவிப்புகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில், வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவது தவிர, பல்வேறு துறைகளுக்கு அளிக்கும் சேவைகள் மூலம் வருமானமும் ஈட்டி வருகிறது. இப்போது அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் ஒரு முக்கிய நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது.

புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) கீழ் செயல்படும் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் நிறுவனமாக இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளது. 2022-23 நிதியாண்டில் இருந்து ரூ.226 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது. மேலும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (AAI) வழங்கப்படும் விமான வானிலை ஆய்வு சேவைகளிலிருந்து கணிசமான தொகையைச் சம்பாதித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
India Meteorological Department

India Meteorological Department

சென்னையை தளமாகக் கொண்ட தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) வருவாய் ஈட்டும் வகையில் சுமார் 42 தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது என்று புவி அறிவியல் அமைச்சகம் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது ரூ.24 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது.

விமான நிலைய ஆணையத்துக்கு விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வானிலை தரவுகளை விற்பனை செய்தல், குறிப்பிட்ட கால வானிலை அறிக்கைகள் மற்றும் உபகரணங்களை சோதனை செய்தல் ஆகிய சேவைகள் மூலம் வானிலை ஆய்வு மையம் வருவாய் ஈட்டியுள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அளிக்கப்பட்ட தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதன் மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் சுமார் ரூ.66 கோடியை ஈட்டியிருக்கிறது.

33
India Meteorological Department

India Meteorological Department

இவ்வாறு வருவாய் ஈட்டுவது முக்கியமான திட்டங்களை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் சிறப்புத் தேவைகளை மனதில் கொண்டு, அத்துறையின் தேவைகளுக்கு ஏற்ற ஒரு புதிய தரவு தயாரிப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக மக்களவை உறுப்பினர் புவனேஸ்வர் கலிதா தலைமையிலான குழு இத்தகவல்களைத் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான வானிலை நிகழ்வுகளைக் கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கிவருகிறது. இந்த முன்னறிவிப்புகள் பிற தேசிய மற்றும் மாநில அளவிலான பேரிடர் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வானிலை
வானிலை அறிக்கை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved