விட்டா ரொம்ப ஒவரா போற! கடுப்பான தந்தை! மகளை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி!
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பிஆர்எஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் சந்திரசேகரராவ். பின்னர் 2001ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2014 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக சந்திரசேகரராவ் பதவியேற்றுக்கொண்டார். 2023 வரை பதவியில் நீடித்தார். இதனையடுத்து தேசிய அரசியல் அவரது நாட்டம் திரும்பியதால் கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றினார்.
அதன்பிறகு தெலுங்கானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் பிஆர்எஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனால் சந்திரசேகர ராவ் - அவரது மகள் கவிதா இடையே மோதல் வெடித்தது. அதுமட்டுமல்லாமல் சகோதரர் ராமாராவுடனும் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார்.
இதனிடையே காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த முறைகேட்டில் தனது தந்தை சந்திரசேகரராவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் சந்தோஷ் ராவ் மற்றும் ஹரிஷ் ராவுமே இதற்கு காரணம் என்று கவிதா குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி செயல்பட்டதாக கூறி கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கையானது பிஆர்எஸ் பொதுச் செயலாளர் டி. ரவீந்தர் ராவ் மற்றும் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பொறுப்பாளர் சோமா பாரத் குமார் பெயரில் வெளியாகியுள்ளது. பிஆர்எஸ்ஸில் இருந்து நீக்கம் செய்யப்ப கவிதா விரைவில் பத்திரிகையாளரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.