- Home
- உடல்நலம்
- Tea : எப்பவும் 'டீ' குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கனுமா? நிபுணர்கள் போட்டு உடைக்கும் உண்மை
Tea : எப்பவும் 'டீ' குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கனுமா? நிபுணர்கள் போட்டு உடைக்கும் உண்மை
Water Before Tea Benefits : டீ குடிக்கும் முன்பு தண்ணீர் குடித்தால் வயிற்றில் அசிடிட்டி எனும் அமிலத்தன்மை பிரச்சனை வருமா? என இங்கு காணலாம்.

நம்மில் பலர் டீ பிரியர்கள் தான். காலை எழுந்ததுமே டீ இல்லாமல் பலருக்கும் நாட்கள் தொடங்காது. ஆனால் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும் என சொல்லப்படுகிறது. வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும். அசிடிட்டி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. டீயில் காணப்படும் காஃபின், டானின் ஆகிய அமிலங்கள் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்குமாம். டீ குடிப்பதால் ஏற்படும் அமிலத்தன்மையை எவ்வாறு தடுப்பது என்பதைக் குறித்து நிபுணர்கள் சொல்லும் ஆலோசனையை இங்கு காணலாம்.
காலையில் எழுந்ததும் பல் துலக்கிய பின்னர் முதலில் செய்ய வேண்டிய விஷயம் தண்ணீர் குடிப்பதுதான். வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்த பின்னரே டீ குடிக்க வேண்டும். தினமும் காலையில் டீ குடிப்பதற்கு முன்பு கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை தொடர்பான பிரச்சனைகளை குறைக்க முடியும்.
வெறும் வயிற்றில் டீ அருந்துவது நல்லதல்ல. அதற்கு முன்னதாக இளநீர் குடிக்கலாம். இது வயிற்றில் இருக்கும் அமிலத்தை நீர்த்துப் போகச் செய்யும். இதனால் டீயில் காணப்படும் காஃபினின் விளைவுகள் குறைகின்றன. இதனால் வயிற்று எரிச்சல் ஏற்படாது. தண்ணீர் குடித்துவிட்டு டீ குடிப்பதால் முற்றிலுமாக அமிலத்தன்மை நீங்கிவிடும் என சொல்ல முடியாது. ஆனால் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் அமிலத்தன்மை பிரச்சனையை பெருமளவில் குறைக்க உதவுகிறது என இரைப்பை குடல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டீ குடிக்கும் முன் வெதுவெதுப்பான நீரைக் கூட குடிக்கலாம். இதனால் வயிற்றில் உள்ள அமில கார சமநிலை சீராக இருக்கும். வெறும் வயிற்றில் டீ குடிக்காமல் லேசான சிற்றுண்டி அல்லது சில பழங்கள் கூட சாப்பிடலாம். காலை சாப்பிட்ட பின்னர் டீ குடிக்கலாம். சிலருக்கு இதையெல்லாம் செய்த பின்னரும் கூட அமிலத்தன்மை பிரச்சனை இருக்கலாம் அவர்கள் பால் சேர்த்த டீ அருந்துவதற்கு பதிலாக மூலிகை டீ கிரீன் டீ பிளாக் டீ ஆகியவற்றை அறியலாம் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் அமில பிரச்சனையை அதிகப்படுத்தலாம்.
பால் டீயை தவிர்க்க முடியாதவர்கள் தேயிலையை பாலுடன் கொதிக்க வைக்காமல் தனியே கொதிக்க வைக்க வேண்டும். முதலில் பிளாக் டீ தயார் செய்துவிட்டு, அதனுடன் பால் கலந்து குடிக்கலாம்.
டீ குடிப்பதால் வரும் அசிடிட்டி பிரச்சனையை தடுக்க வெறும் தண்ணீர் குடிப்பது போதாது. பகலில் எண்ணெய் உணவுகள், காரம் அல்லது ஜங்க் புட்ஸ் சாப்பிட்டால் முற்றிலும் விடுபடுவது கடினம். உங்களுக்கு ஏற்கனவே அசிடிட்டி பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டால் உணவு பழக்கத்தை மாற்றுங்கள் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.