இந்த பதிவில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக உதவும் இரண்டு வகையான மூலிகை டீ பற்றி பார்க்கலாம்.
மழைக்காலம் வந்தாலே கூடவே இருமல், சளி, வைரஸ் தொற்றுகள் என வரத் தொடங்கும். எனவே மத்த சீசனை விட மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வைத்திருப்பது மிகவும் அவசியம். இதற்கு நம் வீட்டில் இருக்கும் மூலிகைகளை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள முடியும். அவை என்னவென்றால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக முக்கியமான இரண்டு மூலிகைகளான இஞ்சி மற்றும் துளசி தான்.
இவை இரண்டுமே வைரஸ் போன்ற தொற்று நோய்களை எதிர்த்து போராடும் தன்மையுடையது. மழைக்காலத்தில் விதமாக வரும் தொற்று நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க இந்த இரண்டு மூலிகைகளிலும் டீ போட்டு குடிக்கலாம். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குளிர்ச்சியில் உடலை இதமாகவும் வைக்கவும் உதவுகிறது. ஆனாலும் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க இந்த இரண்டில் எது சிறந்தது என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி டீ :
துளசி டீ தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை நன்கு சுத்தம் செய்து சீரகம், மிளகு ஆகியவற்றை இடித்து ஒரு கப் தண்ணீரில் அவை அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பிறகு குடிக்கவும். வேண்டுமானால் வெறும் துளசி தண்ணீர் கூட கொதிக்க வைத்து குடிக்கலாம்.
மழைக்காலத்தில் துளசியை இந்த முறையில் எடுத்துக் கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் செய்யும்.
துளசி எப்படி உதவுகிறது?
- துளசியில் நிறைந்திருக்கும் செல்களில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடும். மேலும் உடலில் ஆக்ஸிவ்னேற்ற அழுத்தத்தையும் குறைக்கும். இதனால் மனநிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல், மன அழுத்தமும் குறையும்.
- மேலும் துளசியில் இருக்கும் அடாப்ஜங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மறைமுகமாக பாதுகாக்கும்.
இஞ்சி டீ
இஞ்சி டீ மழைக்காலத்தில் பரவும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் மேலும் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற உதவுகிறது.
இஞ்சி எப்படி உதவுகிறது?
- இஞ்சியில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளதால், அவை உடலில் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கவும், அஜீரணத்திற்கும் உதவும்.
- உடலில் இன்ஃப்ளமேஷன்களால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனப்படும். எனவே அதை குறிப்பதற்கு இஞ்சி டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- அதாவது இஞ்சியில் இருக்கும் இன்சரால் என்னும் பண்புதான் இன்ஃப்லமேஷன்களை குறைத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
எது பெஸ்ட்?
இஞ்சி டீ மற்றும் துளசித்தி இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மழைக்காலத்தில் இந்த இரண்டையும் எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் தொண்டை வலி, நெஞ்சில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளில் தீவிரத்தையும் குறைக்க இவை உதவும்.
எனவே மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சி டீ அல்லது துளசி இவை இரண்டையுமே நீங்கள் தினமும் குடிக்கலாம். இதனால் நல்ல மாற்றத்தையும் நீங்கள் காண்பீர்கள்.
