MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தினமும் இவ்ளோ ஸ்டெப் நடந்தா போதும்! பிட்னஸ் பற்றி கவலையே இல்ல!

தினமும் இவ்ளோ ஸ்டெப் நடந்தா போதும்! பிட்னஸ் பற்றி கவலையே இல்ல!

Walking Tips: நடைப்பயிற்சி பல நோய்களின் அபாயத்தைக் குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினசரி நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றைத் தடுக்கவும் உதவுகிறது, குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

2 Min read
Author : SG Balan
Published : Jan 02 2025, 09:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Walking

Walking

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும் ஒரே மாத்திரை இருந்தால், அது ஒரு அதிசய மருந்தாக இருக்கும். அதுதான் நடைபயிற்சி. தினசரி நடவடிக்கையில் ஒன்றாக வாக்கிங்கையும் சேர்த்துக்கொண்டால் உடல்நலப் பிரச்சினைகள் பலவற்றைத் தவிர்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Benefits of Walking

Benefits of Walking

நடைபயிற்சியால் ஏற்படும் நல்விளைவுகளைப் பற்றி பல ஆய்வுகள் தொடர்ந்து நிரூபித்துள்ளன. ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, வாக்கிக் மூலம் 72 சதவீதம் பேருக்கு பல நோய்களின் அபாயம் குறைத்துள்ளதாகக் கூறுகிறது.

35
Walking daily

Walking daily

நடைபயிற்சியின் நன்மைகள்:

நடைபயிற்சி உணவு ஆற்றலை நமது தசை செல்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. அங்கு அது உடலுக்கு பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த செயல்முறை இல்லாமல் போனால், உணவு ஆற்றல் உடல் கொழுப்பில் குவிகிறது. இதனால் உடல் பருமன், நீரிழிவு, இதய பிரச்சினைகள் போன்ற நோய்களுக்குக் காரணமாகிறது.

வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்வது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தமனிகளின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. நடையில் வேகம் முக்கியம் இல்லை. மெதுவாக நடப்பதை விட வேகமாக நடப்பதுதான் நல்லது என்று ஏதும் இல்லை. உங்கள் நடையின் வேகத்தை அதிகரிப்பதை அதிக தூரம் நடப்பதுதான் முக்கியம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

45
8,000 steps Walking

8,000 steps Walking

யாருக்கு அதிக பயன்?

நடைபயிற்சி அனைவருக்கும் பயனளிக்கும். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்கிங் செல்வதால் அதிக பலன் உண்டு. வாரத்திற்கு மூன்று முதல் ஏழு முறை 8,000 அடி நடைபயிற்சி செய்வது இறப்பை ஒத்திப்போடும் வழி என்று ஜமாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு இன்றியமையாத தேவையாக நடைபயிற்சி இருக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. நடைப்பயிற்சியை தினசரி பழக்கமாக மாற்றிக்கொண்டால் விரைவிலேயே அதன் பலன் தெரியும்.

55
Walking as a routine

Walking as a routine

நடையை அதிகரிக்க எளிய வழிகள்:

அன்றாட நடவடிக்கைகளின் மூலமாகவே நடையை அதிகரிக்கலாம். தொலைபேசி அழைப்புகள் அல்லது சந்திப்புகளின்போது நடந்துகொண்டே பேசலாம். வேலை இடைவேளையின் போது சிறிது நேரம் நடக்கலாம். லிஃப்ட்களுக்குப் பதிலாக படிக்கட்டுகளில் செல்லலாம்.

உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்திற்காகவும் சிக்கலான உடற்பயிற்சி, நம்பத்தகாத உணவு முறைகள் போன்றவற்றில் சிக்கிக் கொள்வதற்குப் பதிலாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் சிறிது தூரம் நடப்பது உங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாக மாறும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சி குறிப்புகள்
நடைப்பயிற்சியின் நன்மைகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Recommended image2
Mushroom Chutney: காளான் சட்னி ரெசிபி..காரசாரமான சுவையில் ஈஸியாக செய்வது எப்படி?
Recommended image3
Egg Curry: உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.. மணக்க மணக்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved