- Home
- உடல்நலம்
- Makhana : மக்கானா ஆரோக்கியத்திற்கு நல்லது.. ஆனா இவங்க சாப்பிட்டா மட்டும் பிரச்சனைதான் வரும்
Makhana : மக்கானா ஆரோக்கியத்திற்கு நல்லது.. ஆனா இவங்க சாப்பிட்டா மட்டும் பிரச்சனைதான் வரும்
மக்கானா ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த பதிவில் யாரெல்லாம் மக்கானா சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

Who Should Not Eat Makhana
மக்கானா (Makhana) என்று அழைக்கப்படும் தாமரை விதையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. சூப்பர் ஃபுட்டான மக்கானாவை இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அனைவரும் தங்களது உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஏனெனில் இதில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளன. இருந்தபோதிலும் சிலருக்கு இது கடுமையான உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பதிவில் யாரெல்லாம் மக்கானா சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் :
மக்கானாவில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் கடுமையான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
சர்க்கரை நோயாளிகள் :
மக்கானா குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவாக இருந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை நோயாளிகள் இதை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
செரிமான பிரச்சனைகள் :
மக்கானாவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வாயு, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். அதுபோல பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள் மக்கானாவை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வாமை :
மக்கானா சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் மக்கானாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அரிப்பு, தடிப்புகள், சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
எடையை அதிகரிக்கும் :
மக்கானாவில் நெய், எண்ணெய் அல்லது பிற மசாலா பொருட்கள் சேர்த்தால் அதில் இருக்கும் கூடுதல் கொழுப்பு மற்றும் கலோரிகள் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மக்கானாவை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும்.