- Home
- உடல்நலம்
- Rice Risks : நீங்க 3 வேளையும் சோறு சாப்பிடுறீங்களா? இந்த விஷயம் தெரியாம இருக்காதீங்க! உடம்புக்கு என்னாகும்?
Rice Risks : நீங்க 3 வேளையும் சோறு சாப்பிடுறீங்களா? இந்த விஷயம் தெரியாம இருக்காதீங்க! உடம்புக்கு என்னாகும்?
தினமும் மூன்று வேளையும் சாதம் சாப்பிட்டால் சில உடல்நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
Effects of Eating Rice Every Day
தென்னிந்தியாவின் பிரதான உணவு வெள்ளை அரிசி சாதமாகும். நம்முடைய உணவின் முக்கிய உணவாக அரிசி இருப்பதால் அதை தவிர்க்க முடியாதவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இன்னும் சில வீடுகளில் அல்லது சில மக்கள் காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளையும் அரிசி சாதம் உணவாக சாப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு நாளைக்கு 3 வேளையும் அரிசி சாதம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல தெரியுமா? ஒரு நாளைக்கு மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிட்டால் உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றன. அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
எடை அதிகரிக்கும் :
வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் அதை இரண்டு அல்லது மூன்று வேளையும் அதிகமாக சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகமாகும். இதன் விளைவாக விரைவில் உடல் பருமனாகும். அதுமட்டுமல்லாமல் சாதம் சாப்பிட்ட பழகினால் சில மணி நேரத்திலேயே பசி உணர்வு ஏற்படும். இதனால் அதிகமாக சாப்பிடும் பிரச்சனையும் அதிகரிக்கும். ஆகவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைத்தால் அரிசி சாதத்தை சாதம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடுங்கள்.
இரத்த சர்க்கரை அளவு உயரும் :
சர்க்கரை நோயாளிகள் அரிசி சாதத்தை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் அரிசியில் கிளைசெமிக் குறியீடு மிகவும் அதிகமாக உள்ளதால் சாதம் சாப்பிட்ட உடனே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக வேகமாக உயர ஆரம்பிக்கும். இதன் காரணமாக தான் சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் அரிசி சாதத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப்படுகிறது.
இதயம் தொடர்பான பிரச்சனைகள் :
தினமும் வெள்ளை அரிசி சாதம் அதிகமாக சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உண்மையில் வெள்ளை அரிசியில் சத்துக்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. குறிப்பாக நார்ச்சத்து ரொம்பவே கம்மி. ஆகவே தினசரி உணவில் வெள்ளை அரிசி சாதத்தை சேர்த்துக் கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு வேகமாக அதிகரிக்கும். இதனால் இதய தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வேண்டுமானால் வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசி சாப்பிடலாம்.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் ;
தினமும் மூன்று விளையும் வெள்ளை அரிசி சாதம் சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு வேகமாக அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. உங்களுக்கு ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால் வெள்ளை அரிசிக்கு பதிலாக பிற உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
வளர்சிதை மாற்ற நோய்க்குறி அபாயம் ;
தினமும் வெள்ளை அரிசி சாதத்தை சாப்பிட்டால் வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆம், வெள்ளை அரிசியானது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை படிப்படியாக குறைக்க ஆரம்பிக்கும். இதனால் உடல் பருமன், செரிமான பிரச்சனை ஏற்படும். ஆகவே வெள்ளி அரிசிக்கு பதிலாக பறிப்பு பழுப்பு அரிசி சாப்பிடவும்.