- Home
- Lifestyle
- Leftover Rice Chapati Recipe : சாதம் மீந்து போச்சுன்னா கழனியில கொட்டாதிங்க! அதவச்சு சாப்டான சப்பாத்தி செய்து சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
Leftover Rice Chapati Recipe : சாதம் மீந்து போச்சுன்னா கழனியில கொட்டாதிங்க! அதவச்சு சாப்டான சப்பாத்தி செய்து சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
மீந்து போன சாதத்தில் சாப்டான சப்பாத்தி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களது வீட்டில் மதியம் பொங்கின சாதம் மீந்து போயிடுச்சா? இரவில் யாரும் சாதம் சாப்பிட விரும்பவில்லையா? இப்போது என்ன செய்றதுன்னு தெரியாமல் மீந்த சாதத்தை கழனி பானையில் கொட்டுகிறீர்களா? இனிமேல் இப்படி சாதத்தை வேஸ்ட் பண்ணாதீர்கள். மீண்டு போன சாதத்தை வைத்து சுவையான மற்றும் சாஃப்ட்டான சப்பாத்தி செய்யலாம் தெரியுமா? வாங்க அது எப்படி செய்றதுனு இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
மீந்த சாதத்தில் சப்பாத்தி செய்வது எப்படி?
முதலில் சாதத்தில் தண்ணீர் ஏதும் இல்லாமல் சுத்தமாக வடித்துக் கொள்ளவும். இப்போது அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்த இந்த சாதத்தில் 3-5 ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு கோதுமை மாவு, 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இவற்றை நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைய வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள்.
மாவு நன்கு ஊறியதும் வழக்கம் போல சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சப்பாத்தி மாவு தேய்க்கும் கட்டையில் ஒவ்வொரு உருண்டையையும் வட்டமாக தேய்த்து சப்பாத்தி கல்லில் சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சாப்டான சப்பாத்தி ரெடி! இந்த சப்பாத்திக்கு உங்களுக்கு பிடித்த சைடுடிஷ் வச்சு சாப்பிடுங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும்.
மேலே சொல்லப்பட்டுள்ள முறைகள் படி மீந்த சாதத்தில் இப்படி மிருதுவான சப்பாத்தி செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இனி சாதமும் வீணாகாது, சப்பாத்தி சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.