- Home
- உடல்நலம்
- இந்த '7' அறிகுறிகள் உடம்புல தெரிஞ்சா நீர்ச்சத்து குறைப்பாடுனு அர்த்தம்! நோட் பண்ணிக்கோங்க
இந்த '7' அறிகுறிகள் உடம்புல தெரிஞ்சா நீர்ச்சத்து குறைப்பாடுனு அர்த்தம்! நோட் பண்ணிக்கோங்க
Symptoms Of Dehydration : உடலில் நீச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடலில் தெரியும் சில அறிகுறிகளை வைத்து அதை கண்டுபிடித்து விடலாம்.

இந்த '7' அறிகுறிகள் உடம்புல தெரிஞ்சா நீர்ச்சத்து குறைப்பாடுனு அர்த்தம்! நோட் பண்ணிக்கோங்க
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவரும் அறிந்தே. நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தால் நம்முடைய உடலில் கிட்டத்தட்ட அனைத்து பிரச்சனைகளும் பாதியாக குறைந்துவிடும். நம் உடல் உறிஞ்சுவதை விட அதிக தண்ணீரை இழக்கும் போது நீரிழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பல சமயங்களில் தலைவலி, சோர்வு மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். ஆனால், சில சமயங்களில் சிலர் உடலில் நீர் பற்றாக்குறை காரணமாக கூட இறக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் கோடை காலத்தில் நீரிழிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனை. உங்களது உடலில் நீர்ச்சத்து இல்லை என்றால் அதை சில அறிகுறிகளை வைத்து கண்டுப்பிடிக்கலாம். அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவு காணலாம்.
தாகம்:
நீங்கள் தாகமாக உணரும் போது உங்களது உடலுக்கு இப்போது தண்ணீர் தேவை, எனவே நீங்கள் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று உங்களுக்கு உணர்த்தும். இந்த அறிகுறியை நீங்கள் புறக்கணித்தால் அல்லது மறந்து விட்டால் உடனடியாக இந்த பழக்கத்தை சரி செய்யுங்கள். இல்லையெனில், பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிறுநீரின் நிறம் மாறும்
பொதுவாக நீங்கள் எந்த வகையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களது சிறுநீர் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதுபோல உங்களது உடலில் நீர்ச்சத்து இல்லை என்றாலும் சிறுநீர் நிறம் மாறும். ஆம் உங்களது சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் நீர்ச்சத்து குறைப்பாட்டிற்கு ஆளாகிறீர்கள் என்று அர்த்தம். அதுவே உங்களது சிறுநீர் வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் ஏற்கனவே நீச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. எனவே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் கவனமாக இருங்கள்.
சோர்வு:
நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்கள் என்றால், உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதற்கான அறிகுறியாகும். உடலில் நீர்ச்சத்து குறைவதால் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். எனவே அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உங்களது உடல் சிறப்பாக செயல்படும். தண்ணீர் இல்லாத காரணத்தினால் தான் உடல் வேலை செய்ய ரொம்பவே சிரமப்படுகிறது.
தலைவலி மற்றும் தலை சுற்றல்:
நீரிழிப்பு தலைவலி ஒற்றைத் தலைவலி மற்றும் தலை சுற்றலை ஏற்படுத்தும். நீங்கள் அடிக்கடி தலைவலி பிரச்சனையை சந்திக்கிறீர்கள் என்றால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதுபோல உங்களுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டால் உங்களது உடலுக்கு அதிக தண்ணீர் தேவை என்பதற்கான அறிகுறிதான் இது. எனவே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.
வறண்ட வாய்:
உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் வறண்ட வாய் வாயில் ஒட்டும் உணர்வு ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் உமிழ்நீர் கூட உருவாகாது. உங்களுக்கு இது மீண்டும் மீண்டும் நடந்தால் இந்த அறிகுறி நீரிழப்பு ஆகும். எனவே இதை புரிந்து கொண்டு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். உங்களுக்கு தெரியுமா வறண்டு வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே இந்த பிரச்சனையிலிருந்து விடுபட தினமும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
வறண்ட சருமம்:
உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றால் அதன் விளைவு உங்களது சருமத்தில்தான் தெரியும். அதாவது உங்களது சருமம் வறண்டு காணப்படும். எனவே உங்களது சருமம் வறண்டு இருந்தால் விலை உயர்ந்த மய்ஸ்சரைசசர் பயன்படுத்துவதற்கு பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.
இதையும் படிங்க: Dehydration : தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கமாட்டீங்களா? அப்ப முதல்ல இதை படிங்க..
மலச்சிக்கல்:
உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையும் ஏற்படும். எனவே நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நிறைய தண்ணீர் குடிக்க ஆரம்பியுங்கள். பின்னர் மாற்றத்தை பாருங்கள்.
இதையும் படிங்க: தண்ணீர் குறைவாக குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா? நிபுணர்கள் பதில்!