Fitness Tips : ஜிம் போகாம 'உடலை' ஃபிட்டாக வைக்க சூப்பர் ஐடியாக்கள்! தினமும் செய்ங்க
ஜிம் போகாமல் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்னவென்று இங்கு காணலாம்.

ஜிம் போகாமல் உடம்பை ஃபிட்டா வைக்க டிப்ஸ்கள்!!
பொதுவாக ஒவ்வொரு ஆண்களும் உடம்பை ஸ்லிம்மாக, தசை அதிகமாக, சிக்ஸ் பேக் வைக்க வேண்டுமென்பதற்காக ஜிம்மிற்கு செல்வார்கள். ஆனால் ஜிம்முக்கு போகாமல் உடம்பை ஃபிட்டாக வைக்க சில வழிமுறைகளை தினமும் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.
யோகா
யோகா என்பது மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு சூப்பரான உடற்பயிற்சி ஆகும். இதை செய்வதற்கு எந்தவொரு உபகரணங்கள், ஆடைகள், ஷூக்கள் தேவையில்லை. வெறும் படுக்கை விரிப்பு மட்டும் இருந்தாலே போதும். ஆன்லைனில் யோகா வகுப்புகள் இலவசமாக உள்ளன. எளிமையாக இருக்கும் யோகாசனங்களை மட்டும் கற்றுக் கொண்டாலே போதுமானது. தினமும் யோகா செய்வதன் மூலம் உடல் இலகுத்தன்மை பெற்று, தசைகள் வலிமையாகும்.
பாடி வெயிட் டிரைனிங் :
பாடி வெயிட் டிரைனிங் செய்தால் உடல் வலிமையாகும். இதற்காக நீங்கள் லஞ்சஸ், ஸ்குவாட்டிங், புஷ்-அப்ஸ், புல்-அப்ஸ், சின்-அப்ஸ், செஸ்ட்-அப்ஸ், டிரைசெப்ஸ்-டிப்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
வாக்கிங் மற்றும் ரன்னிங் :
நீண்ட தூரம் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செய்வதன் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும். இது போதிய கலோரிகளை எரிக்கும், மூட்டு இணைப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
ஸ்கிப்பிங் :
தினமும் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உடல் வலிமையாகும் மற்றும் உடலுக்கு மிகுந்த சுறுசுறுப்பை வழங்கும். அதிக கலரிகளை எரிக்க இது பெரிது உதவியாக இருக்கும். மேலும் இதய துடிப்பையும் அதிகரிக்க செய்யும்.
படி ஏறுதல்
உடலுக்கு அதிக வேலை கொடுக்காதவர்கள் படி ஏறுவது நல்ல பலனை வழங்கும். மேலும் இது இதய துடிப்பை அதிகரிக்கச் செய்யும் மற்றும், அதிக கலோரிகளை எரிக்க பெரிதும் உதவும்.

