மலட்டுத்தன்மை வர இந்த 'வைட்டமின்' கம்மியா இருக்குது தான் காரணமாம்!! இதை தவறாம பண்ணுங்க!
மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிற பிரச்சினைகளுக்கு எந்த வைட்டமின் குறைப்பாடு காரணமென்று இந்த பதிவில் காணலாம்.

Vitamin A Deficiency
'வைட்டமின் ஏ' என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரின் உடலுக்கும் தேவையான மிகவும் அத்தியாவசியான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். கண் பார்வையை மேம்படுத்துவது முதல் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்த ஊட்டச்சத்து நமக்கு வழங்குகிறது. உடலில் இந்த ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் :
உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். அதாவது கண் வறட்சி, கண் பார்வை குறைபாடு, பார்வை இழப்பு மற்றும் மாலைக்கண் நோய் போன்ற தீவிர பிரச்சனைகள் கூட வரலாம்.
மலட்டுத்தன்மை :
ஆண், பெண் இருவருக்குமே இனப்பெருக்க உறுப்பு ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் இந்த உறுப்பின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவாக மலட்டுத்தன்மை, கருத்தரிப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக வைட்டமின் ஏ பற்றாக்குறையானது ஆண்களுக்கு அதிக மலட்டுத்தன்மை உண்டாக்கும்.
வளர்ச்சியில் குறைப்பாடு :
தற்போது குழந்தைகள் மத்தியில் வளர்ச்சி குறைபாடு பிரச்சனை அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வைட்டமின் ஏ குறைபாடு தான். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் போதிய அளவு வைட்டமின் ஏ இல்லை என்றால் அது அவர்களது வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுங்கள். அது அவர்களது வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
சரும வறட்சி :
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த, சருமத் பிரச்சனைகளை சரி செய்ய வைட்டமின் ஏ உதவுகிறது. உடலில் இதன் பற்றாக்குறை ஏற்பட்டால் சரும அரிப்பு, எரிச்சல், பருக்கள் போன்ற சரும பிரச்சனைகள் உண்டாகும்.
காயங்கள் ஆற தாமதம் :
உடலில் அடிபட்டாலோ அல்லது ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து காயங்கள் ஏற்பட்டாலோ அவை ஆறுவதற்கு நீண்ட காலமானால் வைட்டமின் ஏ குறைபாடு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஊட்டச்சத்து தான் உடலில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும். அவற்றில் தடை உண்டானால் காயங்கள் ஆறுவதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்ளும்.
வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் :
கேரட், மீன், முட்டை, இறைச்சி, பால் பொருட்கள் போன்றவற்றில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளன. குறிப்பாக ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற நிற காய்கறிகள் பழங்களில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளன.
