- Home
- Lifestyle
- Vitamin D : சூரிய ஒளில 'வைட்டமின் டி' பெற "சரியான" நேரம் இதுதான்!! மத்த நேரம் நிக்குறது வேஸ்ட்
Vitamin D : சூரிய ஒளில 'வைட்டமின் டி' பெற "சரியான" நேரம் இதுதான்!! மத்த நேரம் நிக்குறது வேஸ்ட்
சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி-யை பெற சரியான நேரம் எது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Vitamin D
'வைட்டமின் டி' என்றாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது சூரிய ஒளி தான். உணவின் மூலமும் இந்த ஊட்டச்சத்தை பெற முடியும். சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி-யை பெற நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருந்து தான் சூரிய ஒளியிலிருந்து அதிக வைட்டமின் டி-யை எடுத்துக் கொள்ள முடியும். அதன்படி வைட்டமின் டி-யை சூரிய ஒளியிலிருந்து பெற சிறந்த நேரம் எது? அது ஏன் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியமானது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வைட்டமின் டி-யின் ஆரோக்கிய நன்மைகள் :
வைட்டமின் டி நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இது தசை செயல்பாட்டிற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ரஉத்தத்தில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அளவை சீராக வைக்கவும் இது உதவுகிறது. இதய நோய் மற்றும் சில வகையான புற்று நோய்களின் அபாயத்தை வைட்டமின் டி உதவியுடன் குடிக்கலாம்.
வைட்டமின் டி பெற சூரிய ஒளியில் நிற்க சிறந்த நேரம் எது?
சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறந்த நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சூரியனின் புற ஊதா B (UVB) கதிர்கள் வலுவாக இருப்பதால் தோல் வைட்டமின் டி யை திறம்பட உற்பத்தி செய்ய உதவும். காலை சூரிய ஒளியும் நல்லது தான். ஆனால் வைட்டமின் டி-யை விரைவாகப் பெற இந்த நேரம் தான் மிகவும் பயனுள்ளது. மேலும் இது மகிழ்ச்சி ஹார்மோன் செரொடோனின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும். இதனுடன் வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நினைவில் கொள் :
சூரிய ஒளியின் நேர அளவானது உங்களது சருமத்தின் நிறத்தை பொருத்தும் மாறுபடும். எனவே அதிக நேரம் சூரிய ஒளியில் நிற்பதை தவிர்க்கவும். தேவையான நேரத்திற்கு மட்டுமே நிற்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. சூரிய ஒளியில் நீண்ட நேரம் நின்றால் தோல் புற்றுநோய் மற்றும் முன்கூட்டியே முதுமை போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளன.
எனவே இனி சூரிய ஒளியில் வைட்டமின் டி பெற விரும்பினால் இந்த நேரத்தில் நிற்கவும். இதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டையும் சரி செய்யலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

