Explained | பால் பொருட்களில் A1, A2 லேபிளிங் நீக்க உத்தரவு! எந்த பால் வாங்குவது நல்லது?
பால் பொருட்களில் A1 A2 இதுபோன்ற லேபிள்களை அகற்ற வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Milk
மார்க்கெட்டிற்கு பால் வாங்க சென்றால்... A1, A2 என்று பல வகைகள் மார்க்கெட்டில் காணப்படுகின்றன. ஒரு வகை நல்ல பால் என்று அதிக விலைக்கு, ஒரு வகை பால் சற்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும்.. எந்த விலை அதிகமாக இருக்கிறதோ அதுதான் நல்லது என்ற மாயையில் மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில்.. இந்த லேபிளிங் மீது அரசு தற்போது அதிரடியாக இறங்கியுள்ளது.
Milk
பாலில் இதுபோன்ற லேபிள்களை அகற்ற வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பால், நெய், தயிர், வெண்ணெய் போன்றவற்றில் A1 , A2 லேபிள்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006ன் படி விதிகளைப் பின்பற்றவில்லை என்றும், இந்த லேபிளிங்கை அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Milk
"பல உணவு வணிக நிறுவனங்கள் (FBO) Fssai உரிம எண் கீழ் A1, A2 என்ற பெயரில் நெய், வெண்ணெய், தயிர் போன்ற பால் , பால் பொருட்களை விற்கின்றன/சந்தைப்படுத்துகின்றன என்பது Fssai கவனத்திற்கு வந்துள்ளது. A2 என்ற பெயரில் பால் கொழுப்பு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தவறாக வழிநடத்துவது மட்டுமின்றி "FSS சட்டம், 2006ன் கீழ் வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்கவில்லை" என்று உணவு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Milk
A1, A2 வகை பால் என்றால் என்ன?
A1, A2 பால்களுக்கு இடையிலான வேறுபாடு பீட்டா-கேசீன் எனப்படும் புரதத்தின் கட்டமைப்பைப் பொறுத்தது. மேலும், இது மாட்டின் இனத்தைப் பொறுத்து மாறுபடும். இது நுகர்வோரை குழப்பத்திற்கு உள்ளாக்குகிறது. ஆறு மாதங்களுக்குள்...இந்த லேபிள்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹெல்த்லைன் படி, சில ஆய்வுகள் A2 ஆரோக்கியமானதாக இருக்கலாம் என்று கூறுகின்றன, இருப்பினும் இது தொடர்பான ஆராய்ச்சி தொடர்கிறது. சில ஆய்வுகள் A1 பீட்டா-கேசீன் தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் , A2 பீட்டா-கேசீன் பாதுகாப்பான தேர்வாகும் என்றும் கூறுகின்றன. கேசீன் என்பது பாலில் உள்ள புரதங்களின் மிகப்பெரிய குழுவாகும், இது மொத்த புரத உள்ளடக்கத்தில் 80% ஆகும்.
Milk
A1 பீட்டா-கேசீன்: வடக்கு ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட மாடுகளின் இனங்களிலிருந்து வரும் பால் பொதுவாக A1 பீட்டா-கேசீன் அதிகமாக இருக்கும். இந்த இனங்களில் ஹோல்ஸ்டீன், ஃப்ரிசியன், ஐர்ஷையர் மற்றும் பிரிட்டிஷ் ஷார்ட்ஹார்ன் ஆகியவை அடங்கும்.
A2 பீட்டா-கேசீன்: A2 பீட்டா-கேசீன் அதிகம் உள்ள பால் முதன்மையாக செனல் தீவுகள், தெற்கு பிரான்ஸில் தோன்றிய இனங்களில் காணப்படுகிறது. இதில் குர்ன்சே, ஜெர்சி, சரோலைஸ் மற்றும் லிமோசின் மாடுகள் அடங்கும்.
A1 பீட்டா-கேசீன் செரிக்கப்படும்போது, அது பீட்டா-காசோமார்பின்-7 (BCM-7) என்ற பெப்டைடை உருவாக்குகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது வீக்கம், செரிமான அசௌகரிம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது.
Milk
நுகர்வோர் எவ்வாறு பால் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
புல் , இயற்கையான தீவனங்களை உண்ணும் மாடுகளிடமிருந்து A2 பாலை வாங்குவதை பரிசீலிக்கவும். கூடுதல் ஹார்மோன்கள் இல்லாத, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் ஊசி போடப்படாத பாலைத் தேர்ந்தெடுக்கவும்.
புல் தீவனம் கொடுக்கப்படும் கால்நடைகள் உங்களுக்கு சிறந்த பாலை வழங்க முடியும். உள்ளூர் பசுக்கள், கிர் பசுக்கள், இவை புல் உண்ணும். சமச்சீரான உணவை உறுதிப்படுத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வைக்கோலை உண்கின்றன
Milk
மார்க்கெட்டில் கிடைக்கும் பால் மாற்றுகள் என்ன?
தேங்காய் பால்: இது தேங்காயின் சதைப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு தனித்துவமான தேங்காய் சுவை மற்றும் அருமையான , கிரீமி அமைப்பைக் கொண்டுள்ளது.
ஓட்ஸ் பால்: இது முழு ஓட்ஸ் தானியங்கள் அல்லது தண்ணீரில் கலந்த ஓட்மீலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது மென்மையான, சற்று இனிப்பு சுவை மற்றும் கிரீமி அமைப்பைக் கொண்டுள்ளது.
அரிசி பால்: இது அரிசியை அரைத்து, தண்ணீரில் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது பசுவின் பாலை விட மெல்லியதாக இருக்கும். இனிப்பு சுவையைக் கொண்டுள்ளது.
Milk
நட்ஸ் பால்: பாதாம், வேர்க்கடலை, ஹேசல்நட், முந்திரி போன்ற மார்க்கெட்டில் கிடைக்கும் எந்த கொட்டைகளிலிருந்தும் நீங்கள் மிகச் சிறந்த பாலைப் பெறலாம். நட்ஸ் பாலில் கலோரிகள் குறைவாக உள்ளன . கால்சியம், வைட்டமின் டி, போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் வலுவூட்டப்படுகின்றன.
சோயா பால்: சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் சோயா பால் ஒரு பிரபலமான பால் மாற்றாகும். இது பெரும்பாலும் பசுவின் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்களுடன் பொருந்தக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் வலுவூட்டப்படுகிறது.