விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முந்திரி..!
ஆன்மை குறைபாட்டை உணவு முறையுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் போது, மரத்தில் விளையும் பொருட்களில் இருந்து கிடைக்கும் கொட்டைகள், பாதாம், ஹேசல்நட்ஸ் மற்றும் அக்ரூட் பருப்பு வகைகள் உள்ளிட்டவை விந்தணுக்களின் உயிர்சக்தி இயக்கத்துக்கும் மற்றும் செயலாக்கத்துக்கும் பெரியளவில் காரணமாக உள்ளது. இந்நிலையில் முந்திரியின் பயன்பாட்டும் விந்தணுக்களின் உற்பத்திக்கு பெரும் வலைமை சேர்க்கிறது.
cashew
பருப்பு வகைகளை நாம் உண்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது. பெரும்பாலான பருப்பு வகைகளில் நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே. தாமிரம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளன. இது விந்துணு குறைபாடுள்ளவர்களுக்கு பெரும் வரப்பிராசதமாக அமையும். ஆண்களுக்கு விந்தணு பாதிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணிகளில் ஒன்று உணவுமுறை. சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதால், விந்துணுக்களின் தரம் மற்றும் ஆண்மை பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது. ஆன்மை குறைபாட்டை உணவு முறையுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் போது, மரத்தில் விளையும் பொருட்களில் இருந்து கிடைக்கும் கொட்டைகள், பாதாம், ஹேசல்நட்ஸ் மற்றும் அக்ரூட் பருப்பு வகைகள் உள்ளிட்டவை விந்தணுக்களின் உயிர்சக்தி இயக்கத்துக்கும் மற்றும் செயலாக்கத்துக்கும் பெரியளவில் காரணமாக உள்ளது. இந்நிலையில் முந்திரியின் பயன்பாட்டும் விந்தணுக்களின் உற்பத்திக்கு பெரும் வலைமை சேர்க்கிறது.
cashew
இருதயத்துக்கு நல்லது
முந்திரியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல பிரச்சனைகள் நீங்கும். இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முந்திரி உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த முந்திரி ரத்த நாளங்களை பலப்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் முந்திரியின் பங்கு அளப்பரியது.
கொலஸ்ட்ராலை குறைக்கிறது
முந்திரியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடலில் கொழுப்பு பாதிப்பை அதிகரிக்கும் என்று பலரும் கூறுவார்கள். அதனால் இனிப்பு உணவுகளில் முந்திரி அளவாகவே சேர்க்கப்படும். ஆனால் உண்மையில் முந்திரி கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடிய வல்லமை படைத்தது என்பது உங்களில் எத்தனை பேருக்கும் தெரியும். இதில் நிறைய நார்ச் சத்து உள்ளது. ஒரு கைப்படி அளவு முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால், இருதயத்துக்கு நல்லது. மேலும், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு உங்களுக்கு வராது.
தாதுக்கள் நிறைந்தது
முந்திரியில் ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் அர்ஜினைன் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். முந்திரியில் சர்க்கரை அளவு அதிகம். அதனால் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 வரை மட்டுமே சாப்பிடுவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
எலும்புக்கு உறுதி சேர்க்கும்
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களுடன் துத்தநாகம் போன்ற முக்கியமான தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது உடல் அழற்சியையும் குறைக்கிறது. தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும் முந்திரி சாப்பிடுவதால் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
Cashew Nut
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பிரபலமான பி.எம்.சி மருத்துவ நாளிதழில் வெளியான தகவலின் படி, முந்தியில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை எளிதில் குறைக்க உதவுகிறது. முந்திரியில் நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளது. இது கார்ப்போஹைட்ரேட்டுடன் சேரும் போது தான் உடல் எடையை கூட்டுகிறது. சுவாச நோய்கள் அபாயத்தை தன்மை கொண்ட முந்திரி, திர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.