பாலூட்டும் பெண்கள் கட்டாயம் இந்த '6' பழங்களை சாப்பிடனும்! ஏன் தெரியுமா?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்தெந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

Fruits For Breastfeeding Mothers : பொதுவாக குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிடும். அவர்கள் சாப்பிடும் உணவு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், பால் சுரப்பியை தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைக்கு பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதால், தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கான உணவுகளை அதிகமாக எடுத்து கொள்வார்கள். காரணம் தாய்ப்பால் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து வீட்டு சொத்துக்களையும் வழங்கும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் சிறந்த ஆரோக்கியமான பாலை வழக்க தங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான பெண்கள் எளிதில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கக்கூடிய பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். ஆனால் அவை தான் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் என்று பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. சில பழங்கள் பாலுட்டும் பெண்களுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. எனவே, ஊட்டச்சத்து குறைவாக தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், சிறந்த ஆரோக்கியமான பால் சுரக்க என்னென்ன பழங்களை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: இந்த தவறுகளை செய்யும் தாய்மார்களுக்கு 'தாய்ப்பால்' சுரப்பு குறையும்!! எதை செய்யக் கூடாது?
சப்போட்டா:
தாய்ப்பால் கொடுக்கும் போது சிலருக்கு வாந்தி, மயக்க, குமட்டல் ஏற்படும். இவற்றை சமாளிக்க உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இதற்கு சப்போட்டா உங்களுக்கு உதவும். இதில் தேவையான ஆற்றல் அனைத்தும் உள்ளன.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெரியில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளன. இதனால் தான் மருத்துவர்கள் இந்த பழத்தை சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். மேலும் இதில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளதால், உடலை நீரேற்றமாக வைக்கும். இதனால் தாய்ப்பாலும் அதிகமாக சுரக்கும்.
இதையும் படிங்க: தாய்ப்பால் அதிகரிக்க பிரசவத்திற்கு பின் பிரெட் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் அதிக அளவு சிட்ரஸ் அமிலம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. எனவே, தாய்ப்பாலில் அதிகளவில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு கிடைக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது பாலூட்டும் அம்மாக்களுக்கு ரொம்பவே நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த காரணத்திற்காக தான் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பச்சை பப்பாளி
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த பழம் பெரிதும் உதவும். அதேசமயம் இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ பாலூட்டும் பெண்களுக்கு ரொம்பவே நல்லது.
அவோகேடா
தாய்ப்பால் கொடுக்கும் அம்மாகளின் உடலில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இருந்தால் மட்டுமே அவர்களால் குழந்தை பால் கொடுக்க முடியும். எனவே, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு அவோகேடா சாப்பிடுங்கள். ஏனெனில், இந்த பழத்தில் ஒமெகா-3 , ஒமெகா -9 மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது குழந்தைக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்கும்.