தாய்ப்பால் அதிகரிக்க பிரசவத்திற்கு பின் பிரெட் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
பிரசவமான பெண்களுக்கு பெரும்பாலும் கொடுக்கப்படும் அறிவுரை பால் மற்றும் பிரெட் சாப்பிட வேண்டும் என்பது. இவ்வாறு சாப்பிட்டால்தான் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மை தானா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
தாய்ப்பால் அதிகரிக்க பிரசவத்திற்கு பின் பிரெட் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
உறவுக்காரப் பெண்கள் குழந்தை பெற்றவுடன் அனைவரும் பார்க்க செல்வது வழக்கம். அப்போது பிரெட் பாக்கெட் எடுத்துச் செல்வார்கள். பாலூட்டும் தாய்மார்களுக்கு காலையில் பால், பிரெட் கொடுப்பது வழக்கம்.
தாய்ப்பால் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?
பால், பிரெட் சாப்பிட்டால் குழந்தைகளுக்குத் தேவையான பால் சுரக்கும். அதனால் பிரசவமான தாய்மார்கள் பிரெட் சாப்பிடுகிறார்கள். ஆனால், பிரெட் சாப்பிடுவதால் பால் அதிகரிக்குமா என்றால் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
தாய்ப்பால் சுரக்க வழி
பிரெட் மைதாவால் தயாரிக்கப்படுகிறது. இது அஜீரணம், மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். பிரசவத்திற்குப் பின் மலச்சிக்கல் ஏற்படும். பிரெட் சாப்பிட்டால் பிரச்சனை அதிகரிக்கும்.
பிரெட் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
மதியம் அல்லது மாலையில் பிரெட் சாப்பிடலாம். காலையில் இட்லி, உப்புமா சாப்பிடலாம். பிரெட்டால் அற்புதம் நடக்கும் என்று நினைப்பது தவறு.