MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • குழந்தைகளுக்கு முடி அடர்த்தியாக வளரணுமா? அப்போ தினமும் இந்த பொருட்களை கொடுங்க!

குழந்தைகளுக்கு முடி அடர்த்தியாக வளரணுமா? அப்போ தினமும் இந்த பொருட்களை கொடுங்க!

குழந்தைகளுக்கு தலை முடி குறைவாக இருப்பது பற்றிக் கவலைப்படும் அம்மாக்களுக்கு, மருத்துவர் ஹேமப்ரியா சில முக்கியமான உணவுப் பொருட்களைப் பரிந்துரைக்கிறார். முட்டை முதல் பாதாம் வரை, குழந்தைகளின் கூந்தல் அடர்த்தியாக ஆக்கும் என கூறியுள்ளார் இது பற்றி விரிவாக பார்க்கலாம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 31 2025, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
முடி வளர்ச்சியை அதிகரிக்க மருத்துவர் கூறும் தகவல்:

முடி வளர்ச்சியை அதிகரிக்க மருத்துவர் கூறும் தகவல்:

ஒரு சில குழந்தை பிறக்கும்போது அவர்களின் மிகவும் அடர்த்தியான முடி இருக்கும், சில குழந்தைகளுக்கு முடி மிகவும் குறைவாக இருக்கும். ஒரு சில பிள்ளைகள் குறைவான முடியுடன் பிறந்தாலும், அவர்கள் வளர வளர முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் ஒரு சில பிள்ளைகளுக்கு மிகவும் குறைவாக முடியிருப்பதை எண்ணி பெற்றோர் மிகவும் கவலை படுவது உண்டு. மிகவும் குறைவாக இருக்கும்  முடியை எப்படி அடர்த்தியாக்குவது என்பது பற்றி மருத்துவர் கூறியுள்ள தகவலை பார்ப்போம்.

எம்பிபிஎஸ் மருத்துவர் ஹேமப்ரியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். குழந்தையின் கூந்தலை அடர்த்தியாக்கும் சில உணவுப் பொருட்களைப் பற்றி அவர் விளக்கியுள்ளார். குழந்தையின் முடி வளர்ச்சியில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சரியான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் குழந்தையின் முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும் என தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
முட்டை:

முட்டை:

 

முடியின் வளர்ச்சிக்கு குழந்தைகளின் உணவில் முட்டை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். முட்டையின் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை மசித்து சாதம் அல்லது காய்கறிகளுடன் சேர்த்துக் கொடுக்கலாம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டையின் பாதி மஞ்சள் கருவைக் கொடுக்க வேண்டும், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு மஞ்சள் கருவையும் கொடுக்கலாம். இது அவர்களின் ஊட்டச்சத்துக்களை கொடுப்பது மட்டும் இன்றி, முடியின் வளர்ச்சிக்கும் சிறந்தது என தெரிவித்துள்ளார்.

புகை பிடிப்பதை நிறுத்த நினைக்கிறீங்களா? இந்த விஷயங்களை ட்ரை பண்ணி பாருங்க!
 

36
வெண்ணெய் பழம் (Avocado):

வெண்ணெய் பழம் (Avocado):

 
வெண்ணெய் பழத்தை மசித்து குழந்தைக்கு ஸ்ப்ரெட் ஆகக் கொடுக்கலாம். பழ கூழுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். குழந்தைக்கு தினமும் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் பழம் கொடுக்கலாம். வெண்ணெய் பழம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும் என தெரிவித்துளளார்.

46
சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

 

சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்த பிறகு அதை மசித்து குழந்தைக்குக் கொடுக்கலாம். சூப் மற்றும் கஞ்சியில் சேர்த்துக் கொடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு ஒரு முறைக்கு இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொடுக்கலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது அவர்களுக்குஇது முடிவளர்ச்சியை தூண்டும்.

அதிதி நடிப்பதற்கு ஷங்கர் போட்ட கண்டீஷன் என்ன தெரியுமா?

56
பருப்பு வகைகள்:

பருப்பு வகைகள்:

 

பல வகையான பருப்பு வகைகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் உள்ளன. பருப்பு வகைகளை முதலில் வேகவைத்து பின்னர் அவற்றை சூப் அல்லது மசித்து கொடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு கால் கப் பருப்பு கொடுக்கலாம். இது அவர்களின் வளர்ச்சிக்கு சிறந்தது.

66
வால்நட் மற்றும் பாதாம் பொடி:

வால்நட் மற்றும் பாதாம் பொடி:

 

குழந்தைக்கு கஞ்சி அல்லது பால் தயாரிக்கும் போது அதில் பாதாம் மற்றும் வால்நட் பொடியைக் கலக்கலாம். குழந்தைக்கு தினமும் ஒரு டீஸ்பூன் வால்நட் பொடி கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து கொடுப்பதும் சிறந்தது.

தமன்னா - விஜய் வர்மா பிரேக்கப்பா? ரகசிய பதிவால் பரபரப்பு!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Idiyappam Biryani : இடியாப்பத்தில் பிரியாணியா? வித்தியாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image3
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved