MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Garlic Help :பூண்டில் 10 நிமிட விதியை பின்பற்றினால் ஆரோக்கியம் கூடும்: எப்படித் தெரியுமா?

Garlic Help :பூண்டில் 10 நிமிட விதியை பின்பற்றினால் ஆரோக்கியம் கூடும்: எப்படித் தெரியுமா?

இந்திய உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையை சேர்ப்பதில் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது. உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.  

2 Min read
Author : Dinesh TG
Published : Oct 09 2022, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பூண்டு குறித்து நிபுணர்களின் கருத்து

அதிசக்தி வாய்ந்த ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பூண்டில் அதிகம் உள்ளது என மருத்துவர் மூமல் ஆசிஃப் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இதனை ஒப்புக்கொண்ட உணவியல் நிபுணர் கரிமா கோயல், பூண்டில் அல்லிசின் என்ற ஒருவித கலவை உள்ளது. உண்மையில், இது ஒரு அருமருந்து என பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிராக போராடும் சிறந்த நோய்த் தடுப்பு விளைவுகளை கொண்டுள்ளது. மேலும், இதன் ஆக்ஸிஜனேற்ற நடவடிக்கைகள் மூலமாக உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பாத்ராவும், பூண்டு ஒரு “அதிசயம் நிறைந்த உணவு” என அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.
 

36

பூண்டின் ஆரோக்கியப் பலன்கள்

பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அல்லிசின் இருப்பதால், பல நோய்த்தொற்றுகளுக்கு  எதிராக போராடி நம் உடலைப் பாதுகாக்கிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, பூண்டானது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் தன்மையை கொண்டுள்ளது. மேலும், டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற சில அறிவாற்றல் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது

46

வறுத்த பூண்டை சிலர் வெறும் வயிற்றில் சாப்பிடுவது வழக்கம். ஆனால், பூண்டை 2 நிமிடங்கள் வறுத்தால் கூட, அதனுடைய அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் அழிக்க நேரிடுகிறது என உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Home Remedies : அடிக்கடி தும்மல் வருதா? அப்போ இதை ட்ரைப் பன்னிப் பாருங்கள்!

56

உணவு சமைத்து முடித்தவுடன், பூண்டில் உள்ள அல்லிசின் கலவையானது, நீரில் கரையக்கூடிய  பி மற்றும் சி ஆகிய வைட்டமின்களுடன் சேர்ந்து இழக்கப்படுகிறது. ஏனென்றால், அவை அனைத்தும் வெப்பத்துக்கு உணர்திறன் கொண்டவை என மருத்துவர் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

Weight Gain : ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி?

66

10 நிமிட விதி

பூண்டின் ஆரோக்கிய நன்மைகளைத் தக்கவைத்துக் கொள்ள, மருத்துவர் ஆசிஃப் ஒரு சிறிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார். பூண்டை நசுக்கி அல்லது நறுக்கி, ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும். இந்த சமயத்தில், அதிகபட்ச அல்லிசின் கலவை உருவாக்கப்பட்டு, சமைக்கும் போது கூட அப்படியே இருக்கும். 10 நிமிடங்களுக்குப் பின்னர், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பூண்டை வதக்கலாம் அல்லது வறுக்கலாம். இது உங்கள் உணவுகளில் ஆரோக்கியத்தை சேர்த்து விடும்.
 

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cooking Oil: பொரித்த எண்ணெய்யில் மீண்டும் சமைக்கலாமா? இல்லத்தரசிகளுக்கு நிபுணர்கள் வார்னிங்!
Recommended image2
ஹோட்டல் ஸ்டைலில் டீ குடிக்கணுமா... அப்போ இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
மழை பெய்தாலே பஜ்ஜி சாப்பிட தோணுதா? ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved