Silver: வெள்ளி பாத்திரங்களில் இவ்வளவு நன்மைகளா! காசு இருக்கப்போ வாங்கி வெச்சிக்கோங்க..
Silver benefits: வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்துவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
வெள்ளி நகைகளை அணிந்தால் உங்களுடைய தோற்றமே மாறிவிடும். விலையும் குறைவு. ஆனால் நகைகள் செய்யப் பயன்படும் அதே வெள்ளியால் உருவாகும் பாத்திரங்கள் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேதத்தின் படி, வெள்ளி நம் உடலில் இருந்து பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. வேதங்களிலும் வெள்ளிக்கு புனிதமான ஒரு இடம் உள்ளது. இதனாலேயே இறைவனுக்கு வெள்ளிப் பாத்திரங்களில் தீர்த்தம் வைக்கிறார்கள். சிலர் பூஜைக்கு வெள்ளி பாத்திரம் பயன்படுத்துகிறார்கள்.
முந்தைய காலங்களில் அரச மாளிகைகளில் தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களில் மட்டுமே உணவு சாப்பிடுவார்கள். இன்றும் சில வீடுகளில் வெள்ளிப் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேதத்தின்படி, வெள்ளியில் 100 சதவீதம் பாக்டீரியாக்கள் தங்குவது இல்லை.
ஆய்வுகளின்படி, வெள்ளி பாத்திரங்கள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக நமது உடலில் இருந்து பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்களை விரட்ட முடியும். ஆனாலும் வெள்ளி எவ்வாறு கிருமிகளை கொல்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சளி, காய்ச்சல் ஆகிய தொற்றுக்கு எதிராக போராடும் பண்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலம் பலப்பட வெள்ளி துணைபுரிகிறது. நாம் சூடான உணவுகளை வெள்ளி பாத்திரத்தில் வைக்கும் போது அதில் உள்ள பாக்டீரியல் எதிர்ப்பு பண்புகள் உணவில் கலந்து உடலில் நோய் எதிர்ப்பு உயருகிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணம், சங்கு ஆகியவற்றில் பால் உள்ளிட்ட உணவுகளை கொடுப்பார்கள். இதனால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கண் நோய்கள், அசிடிட்டி, உடலில் உண்டாகும் எரிச்சல் ஆகியவை குணமாக வெள்ளி உதவுகிறது. வெள்ளி பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் மனநோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. உடலில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வெள்ளி நம் மனதை கட்டுப்படுத்த உதவுவதாக ஜோதிடம் கூறுகிறது. வெள்ளியும் பலன்களை முழுமையாக பெற அதை பயன்படுத்தி பாருங்கள்.