- Home
- உடல்நலம்
- High BP Symptoms : காலை எழுந்ததும் இந்த 5 அறிகுறிகளா? அப்ப உங்களுக்கு பிபி இருக்க வாய்ப்பு
High BP Symptoms : காலை எழுந்ததும் இந்த 5 அறிகுறிகளா? அப்ப உங்களுக்கு பிபி இருக்க வாய்ப்பு
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் காலையில் தோன்றும் 5 அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

High BP Symptoms
உயர் இரத்த அழுத்தம் என்பது தற்போது ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான் இதற்கு காரணமாகின்றன. சிறிது கவனக்குறைவு ஏற்பட்டால் கூட இந்த நோயால் மரணம் கூட நிகழலாம். உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு, இதயம் செயலிழப்பு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே இந்த நோய் தொடர்பான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதன் தீவிரத்தை குறைக்கலாம். சரி இப்போது நீங்கள் தினமும் காலையில் எழும்போது இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். அவை என்னென்னவென்று இங்கு பார்க்கலாம்.
1. கடுமையான தலைவலி
காலையில் தூங்கி எழுந்தவுடனே தலை கனமாக இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது வலியை அனுபவிக்கிறீர்கள் என்றாலோ அசால்டாக இருக்காதீர்கள். ஏனெனில் அது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கும். இந்த தலைவலியானது பொதுவாக தலையின் பின்புறம் அல்லது தலை முழுவதும் இருக்கும்.
2. தலைசுற்றல்
தலை சுற்றிலும் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகும். தினமும் காலை அதுவும் நீண்ட காலமாக இந்த அறிகுறியை நீங்கள் அனுபவித்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
3. மங்கலான பார்வை
உடலில் உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதன் காரணமாக கண்களில் இருக்கும் இரத்த நாளங்கள் சேதமடைந்து மங்கலான பார்வையை ஏற்படுத்தும். எனவே காலையில் தோன்றும் இந்த அறிகுறியை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
4. பலவீனமாக உணர்தல்
காலையில் தூங்கி எழுந்ததுமே நீங்கள் ரொம்பவே பலவீனமாக உணர்ந்தால் அது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கும். ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது உடலானது இரவு நேரத்தில் அதிக ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக தான் நீங்கள் காலையில் பலவீனமாக உணருகிறீர்கள்.
5. வாந்தி, குமட்டல்
உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது வாந்தி, குமட்டல் பிரச்சனை ஏற்படும். நீங்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த பிரச்சனையை அனுபவிக்கிறீர்கள் என்றால் உடனே மருத்துவர் அணுகுவது தான் நல்லது.