- Home
- உடல்நலம்
- Joint Pain Compress : மூட்டு வலியை நீக்க 'கல் உப்பு' இந்த ஒரு பொருளுடன் கலந்து ஒத்தடம் கொடுங்க!!
Joint Pain Compress : மூட்டு வலியை நீக்க 'கல் உப்பு' இந்த ஒரு பொருளுடன் கலந்து ஒத்தடம் கொடுங்க!!
எலும்பு மற்றும் மூட்டு தேய்மானம் காரணமாக ஏற்படும் வலியை குறைக்க சித்த மருத்துவத்தில் நிறைய ஒத்தட முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

Joint Pain Compress
நீண்ட நேரம் நின்று வேலை செய்தல் மற்றும் முதிர் வயது காரணமாக எலும்பு ,மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு வலியை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களுக்கு தான் மூட்டு வலி பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த வலியை குறைக்க சித்த மருத்துவத்தில் சில ஒத்தடம் மற்றும் பற்றுப் போடுதல் முறைகள் உள்ளன. அவை என்ன? அதை எப்படி செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் காணலாம்.
கல் உப்பு மற்றும் மஞ்சள் ஒத்தடம் :
மூட்டு வலிக்கு குறைக்க இந்த ஒத்தடம் சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு ஒரு காட்டன் துணியில் கல் உப்பை சேர்த்து அதில் மஞ்சளும் சேர்த்து கலந்து மூட்டையாக கட்டிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து அதில் இந்த மூட்டையை வைத்து சூடாக்க வேண்டும். பின் நீங்கள் தாங்கும் அளவிற்கு ஒத்தடம் கொடுங்கள். வலி குறைய ஆரம்பிக்கும்.
தேங்காய் பூ ஒத்தடமா?
சித்த மருத்துவத்தில் இந்த ஒத்தடத்திற்கு தனி சிறப்பு இடமுண்டு. இதற்கு ஒரு முடி தேங்காயை துருவி அதை ஒரு சுத்தமான துணியில் கட்டி சூடு செய்து அதை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
கடுகு எண்ணெய் ஒத்தடம் :
எலும்பு தேய்மானம், மூட்டு வலியை குறைக்க இந்த ஒத்தடம் பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் கடுகு எண்ணெயை நேரடியாக மூட்டுகளில் தடவினால் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே கடுகு எண்ணெய் மற்றும் விளக்கெண்ணை இரண்டையும் சம அளவு எடுத்து அதை லேசாக சூடாக்கி மூட்டுகளில் தடவி ஒத்தடம் கொடுங்கவும்.
தவிடு ஒத்தடம்!
காலம் காலமாக இந்த தவிடு ஒத்தடம் வலியை குறைக்க கொடுக்கப்படுகிறது. இதனால் நிறைய கிராமப்புற வீடுகளில் தவிடு வீட்டில் எப்போதுமே வைத்திருப்பார்கள்.
கடுகு :
மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைக்க 2-3 ஸ்பூன் கடுகை மிக்சியில் அரைத்து பொடியாக்கி அதனுடன் சிறிதளவு விளக்கெண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து குழைத்து அதை மூட்டுகளில் பற்று போல போடவும். இந்த பற்று காய்ந்த பிறகு சூடான நீரால் இந்த இடத்தை கழுவவும்.
ஓம பற்று :
மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க இந்த பற்று உதவியாக இருக்கும். இதற்கு ஓமத்தை நீர் சேர்த்து மையாக அரைத்து அதை ஒரு துணியில் வைத்து மூட்டுகளில் இரவு தூங்கும் தளர்வாக கட்டவும். பிறகு மறுநாள் காலை சூடான நீரில் அந்த இடத்தை மட்டும் கழுவவும்.

