Chest mucus: நெஞ்சு சளியால் கடும் அவதியா! இதோ சில இயற்கையான மருத்துவ குறிப்புகள்!
சளி பிடித்ததும், அதனை அப்படியே விட்டுவிட்டால் சுமார் 7 நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடும். இருப்பினும், பலரும் இந்த 7 நாட்கள் வரை காத்திருக்கத் தயக்கம் காட்டுவதால் தான் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்
cough
சளி என்றாலே அனைவருக்கும் மிகவும் கஷ்டமான ஒரு பிரச்சனை தான். சளிப் பிடித்து விட்டால், நம் உடலையே ஒரு வழி செய்து விடும். சளி வந்தால் உடல் சோர்வாக இருப்பது மட்டுமின்றி, உடல் சூடாகவும் இருக்கும். தொடக்கத்தில் மூக்கில் ஒழுகுவதால் அசௌகரியமாக இருக்கும். இரு நாட்கள் சென்றதும் இருமல் ஆரம்பித்து விடும். இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்க முடியாமல் தான், சிலர் சளிப் பிடித்த உடனே மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான ஒரு செயலாகும்.
சளிப் பிரச்சனை
சளிப் பிடித்தலுக்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் உடனடியாக குறைந்து விடும். ஆனால், பின்னாளில் இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். சளி பிடித்ததும், அதனை அப்படியே விட்டுவிட்டால் சுமார் 7 நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடும். இருப்பினும், பலரும் இந்த 7 நாட்கள் வரை காத்திருக்கத் தயக்கம் காட்டுவதால் தான் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அப்படிப் பட்டவர்களுக்கு இயற்கை முறையிலேயே தீர்வு காணலாம். அவ்வகையில், நெஞ்சு சளிப் பிரச்சனைக்கு சில எளிய தீர்வுகளை இப்போது காண்போம்.
சளியைப் போக்கும் எளிய வழிகள்
சளிப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். கூடவே இருமல், மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் உணவு சாப்பிடுவதில் விருப்பமில்லாத நிலை போன்ற பல பிரச்சனைகள் சேர்ந்து கொள்ளும். பச்சை நிறம் அல்லது மஞ்சள் நிறம் என நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே, எதனால் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடியும்.
Water fasting: மாதம் ஒருமுறை தண்ணீர் விரதம் இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
பசும்பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகுத் தூளை கலந்து, ஒரு வாரம் குடித்து வந்தால் நெஞ்சு சளி கரைந்து விடும்.
நெல்லிக்காய் சாற்றில் தேன் மற்றும் மிளகுத்தூள் ஆகிய இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி மற்றும் மூக்கடைப்பு நீங்கும்.
கைப்பிடி அளவு புதினா இலையுடன், சிறிதளவு மிளகை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகள் அனைத்தும் நீங்கி விடும்.
எலுமிச்சை சாற்றை சூடான நீரில் நன்றாக கலக்கிய பிறகு, இதனுடன் தேன் சேர்த்து குடித்து வந்தால் நெஞ்சு சளி குறைந்து விடும்.
தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் கற்பூரம் சேர்த்து அந்த எண்ணெயை தொடர்ந்து நெஞ்சில் தடவி வந்தால் நெஞ்சு சளி குணமடைந்து விடும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். நெஞ்சு சளிப் பிரச்சனை உங்களை விட்டு ஓடியே விடும்.