MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Blood Cancer: ரத்த புற்றுநோய்.. இந்த 7 முக்கிய அறிகுறிகள் இருக்கா... அப்படினா.. உஷார் மக்களே

Blood Cancer: ரத்த புற்றுநோய்.. இந்த 7 முக்கிய அறிகுறிகள் இருக்கா... அப்படினா.. உஷார் மக்களே

ரத்த புற்றுநோய் என்பது எலும்பு மஜ்ஜையில் தொடங்கி ரத்த செல்களைத் தாக்கும் ஒரு கொடிய நோயாகும். இதன் ஆரம்ப அறிகுறிகளான சோர்வு, காய்ச்சல், இரவில் வியர்ப்பது போன்றவை சாதாரண நோய்களைப் போல இருப்பதால், பலரும் இதை அலட்சியம் செய்கின்றனர். 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 26 2026, 10:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
இந்த 7 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்
Image Credit : Getty

இந்த 7 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்

எலும்பு மஜ்ஜையில் தொடங்கி, ரத்த செல்களைத் தாக்கும் புற்றுநோய்தான் ரத்தப் புற்றுநோய். இது ரத்த செல்கள், எலும்பு மஜ்ஜை, நிணநீர் மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. பெரும்பாலும், டி.என்.ஏ-வில் ஏற்படும் பிறழ்வுகள் (mutations) தான் அசாதாரண செல் வளர்ச்சிக்குக் காரணம். இதில் லுகேமியா (வேகமாக வளரும் வெள்ளை ரத்த அணுக்கள்), லிம்போமா (நோய் எதிர்ப்பு மண்டலம்), மைலோமா (பிளாஸ்மா செல்கள்) என மூன்று முக்கிய வகைகள் உள்ளன.
Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
ரத்தப் புற்றுநோய்கள்
Image Credit : Getty

ரத்தப் புற்றுநோய்கள்

இந்தியாவில் லுகேமியா, லிம்போமா, மல்டிபிள் மைலோமா போன்ற ரத்தப் புற்றுநோய்கள் அதிகமாக காணப்படுகின்றன. மற்ற திடக் கட்டிகள் (Solid Tumors) போல இதில் வெளியே தெரியும் அளவுக்கு கட்டிகள் வராது. இது ரத்தம், எலும்பு மஜ்ஜை அல்லது நிணநீர் மண்டலத்துக்குள்ளேயே உருவாகும். இதனால், இதன் அறிகுறிகள் தெளிவாகத் தெரியாது, நாமும் எளிதாக அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்.

Related Articles

Related image1
மே 1ம் தேதி முதல் மதுபானங்கள் விலை உயர்கிறது.. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் குடிமகன்கள்!
Related image2
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
37
ரத்தப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவது எப்படி?
Image Credit : Getty

ரத்தப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவது எப்படி?

ரத்தப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில், இதன் அறிகுறிகள் சாதாரண நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், நீண்ட கால நோக்கில் நல்ல பலன்களும் கிடைக்கும் என குர்கானில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஹீமாட்டாலஜி மற்றும் பிஎம்டி முதன்மை இயக்குநர் டாக்டர் ராகுல் பார்கவா கூறுகிறார்.
47
என்னென்ன அறிகுறிகள்
Image Credit : Getty

என்னென்ன அறிகுறிகள்

மற்ற புற்றுநோய்களைப் போல ரத்தப் புற்றுநோயில் பொதுவாக கட்டியோ, வலியோ இருக்காது. சோர்வு, பலவீனம், லேசான காய்ச்சல், அல்லது அடிக்கடி நோய் தொற்று ஏற்படுவது போன்ற ஆரம்ப அறிகுறிகள் மெதுவாகத்தான் தெரிய ஆரம்பிக்கும்.
57
 அறிகுறிகளின் குழப்பம்
Image Credit : Getty

அறிகுறிகளின் குழப்பம்

ஆரம்பத்திலேயே இதைக் கண்டுபிடிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, அறிகுறிகள் குழப்புவதுதான். தொடர்ச்சியான காய்ச்சல், எடை குறைதல், இரவில் வியர்ப்பது, அல்லது நிணநீர் கணுக்கள் வீங்குவது போன்ற அறிகுறிகளை டி.பி, வைரஸ் காய்ச்சல், அல்லது நாள்பட்ட அழற்சி என நாம் தவறாக நினைக்க வாய்ப்புள்ளது.
67
மற்றொரு அறிகுறி நிணநீர் கணு வீக்கம்
Image Credit : Getty

மற்றொரு அறிகுறி நிணநீர் கணு வீக்கம்

வலியே இல்லாத, தொடர்ச்சியான நிணநீர் கணு வீக்கம் மற்றொரு முக்கியமான அறிகுறி. கழுத்து, அக்குள், அல்லது இடுப்புப் பகுதியில் ரப்பர் போன்ற உறுதியான, வலியற்ற கட்டிகள் சில வாரங்களுக்கு மேல் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். இது லிம்போமாவின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
77
இரவில் அதிகமாக வியர்ப்பதும் ரத்த புற்றுநோயின் அறிகுறி
Image Credit : Getty

இரவில் அதிகமாக வியர்ப்பதும் ரத்த புற்றுநோயின் அறிகுறி

இரவு நேரத்தில் அதிகமாக வியர்ப்பதும் ரத்தப் புற்றுநோயின் ஒரு அறிகுறிதான். தெளிவான காரணமின்றி காய்ச்சல் வருவதும், இரவில் வியர்ப்பதும் ஹாட்ஜ்கின் லிம்போமா மற்றும் நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா ஆகிய இரண்டிற்குமே பொதுவான ஆபத்தான அறிகுறியாகும். சில சமயங்களில் லுகேமியாவிலும் இது ஏற்படலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Heart Attack: அலட்சியம் வேண்டாம்! மாரடைப்பின் 5 'சைலண்ட்' அறிகுறிகள்!
Recommended image2
காலையில் சட்டென 10 நிமிடத்தில் தயாரிக்க ஈஸியான 5 பாரம்பரிய பிரெக்ஃபாஸ்ட் ரெசிபி
Recommended image3
Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 விஷயங்கள்!
Related Stories
Recommended image1
மே 1ம் தேதி முதல் மதுபானங்கள் விலை உயர்கிறது.. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் குடிமகன்கள்!
Recommended image2
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved