MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • மஞ்சளும் கீரையும் நல்லது.. ஆனா 'இப்படி' சமைச்சா ரொம்ப கெட்டது தெரியுமா?

மஞ்சளும் கீரையும் நல்லது.. ஆனா 'இப்படி' சமைச்சா ரொம்ப கெட்டது தெரியுமா?

Turmeric and Spinach : மஞ்சள் ஆரோக்கியமான மசாலா என்றாலும், கீரையில் சேர்த்தால் அது அதன் சுவை மற்றும் சத்துக்களை இழக்க செய்யும்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Mar 01 2025, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மஞ்சளும் கீரையும் நல்லது.. ஆனா 'இப்படி' சமைச்சா ரொம்ப கெட்டது தெரியுமா?

மஞ்சளும் கீரையும் நல்லது.. ஆனா 'இப்படி' சமைச்சா ரொம்ப கெட்டது தெரியுமா?

மஞ்சள் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஒரு சக்தி வாய்ந்த பண்பாகும். இது தவிர இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கல்லீரலை பாதுகாக்கவும் என பல ஆரோக்கிய நன்மைகளை மஞ்சள் நமக்கு வழங்குகின்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் ஆரோக்கியமான மசாலா என்பதாலும், இதில் இருக்கும் பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதாலும் இதை கிட்டத்தட்ட எல்லா உணவுகளில் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும் சில உணவுகள் சமைக்கும்போது அதில் மஞ்சள் சேர்க்கக்கூடாது. ஆனால் நாம் விவரம் தெரியாமலேயே சேர்த்து விடுகிறோம். இதனால் மஞ்சள் அந்த உணவின் சுவையை மாற்றுவது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்களையும் குறைத்துவிடும். அப்படி மஞ்சள் சேர்த்து சமைக்க கூடாது உணவு எதுவென்றால் அது கீரைதான். ஆம், இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. கீரை சமைக்கும் போது அதில் மஞ்சள் ஏன் சேர்க்கக்கூடாது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  அளவுக்கு மீறினால் மஞ்சளும் விஷம் தான்! குழம்புல எவ்வளவு யூஸ் பண்ணணும் தெரியுமா?

34
கீரை

கீரை

கீரை சத்தான இலை காய்கறி ஆகும் இதில் பல வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளன. கீரை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இட்டைக்கு சூழ்நிலையில் கீரை சமைக்கும்போது அதில் மஞ்சள் சேர்க்கக்கூடாது என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. ஏனெனில் மஞ்சள் கீரையின் உண்மையான சுவையை மாற்றிவிடும் மற்றும் கீரையில் இருக்கும் சத்துக்களை குறைத்துவிடும். 

இதையும் படிங்க:  கொழுப்பு கரைய... மஞ்சள், வெந்தயம் போதும்! எப்படி சாப்பிடனும் தெரியுமா?

44
வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதன் சுவை சற்று கசப்பாக இருக்கும். உங்களுக்கு தெரியுமா..இந்த கீரை சமைக்கும் போது அதில் மஞ்சள் சேர்க்கக்கூடாது. காரணம் மஞ்சளின் சுவையும் சற்று கசப்பாக இருக்கும், வெந்தயக் கீரையின் சுவையும் கசப்பாக இருக்கும். இவை இரண்டும் சேர்ந்தால், வெந்தயக்கீரை சாப்பிடுவதற்கு நன்றாக இருக்காது. இதன் காரணமாக தான் வெந்தயக் கீரையில் மஞ்சள் பயன்படுத்த மாட்டார்கள். அதுமட்டுமின்றி மஞ்சளின் சுவை மற்றும் நிறம் கீரையில் இருக்கும் இயற்கையான பண்புகளை அழித்துவிடும். எனவே எந்த கீரை சமைத்தாலும் இனி அதில் மஞ்சள் சேர்க்காதீர்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 விஷயங்கள்!
Recommended image2
Daily Multivitamin : வயதானவர்கள் தினமும் மல்டிவைட்டமின் எடுத்தால் என்ன ஆகும்? வெளியான அதிர்ச்சி தகவல்
Recommended image3
பழம் சாப்பிடும் போது இந்த 5 தப்பு பண்றீங்களா? அப்போ உடனே நிறுத்துங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved