MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தினமும் 1 ஸ்பூன் இஞ்சி சாறு அருந்துவதால் இவ்வளோ நன்மைகளா..? தெரிந்துகொள்ளுங்கள்

தினமும் 1 ஸ்பூன் இஞ்சி சாறு அருந்துவதால் இவ்வளோ நன்மைகளா..? தெரிந்துகொள்ளுங்கள்

இந்த இஞ்சி ஜூஸை எப்படி செய்வது என்பதையும், அதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பார்க்க இருக்கிறோம்

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 08 2023, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சமையலில் சேர்க்கப்படும் இஞ்சி உணவின் சுவைக்காகவும் மற்றும் மணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சளி, இருமல் போன்றவைக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுகிறது. மேலும் செரிமான தொந்தரவுகள், மசக்கை நேரத்தில் உண்டாகும் வாந்தி, குமட்டல் போன்றவைகளுக்கும் இஞ்சியை மருந்தாக பலரும் பயன்படுத்து வார்கள்.

பாட்டி வைத்தியம், சித்த வைத்தியம், நாட்டு வைத்தியம், என்று அனைத்து விதமான வைத்திய முறைகளிலும் இஞ்சி பெரிதும் பயன்படுத்தப்பட்து வருகிறது. இஞ்சியை வெறுமனே கடித்தும் சாப்பிட்டாலும் அதன் பலன் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சர்க்கரை நோய் கட்டுப்படும்:

இஞ்சியில் இருக்கும் ஆன்டி-டயாபடிக் பண்பு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சர்க்கரை நோய் இருப்பவர்கள், ஒரு க்ளாஸ் இஞ்சி ஜூஸைப் பருகி வருவதன் மூலம் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்:

இஞ்சி உடலில் இருக்கின்ற அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, சீராக வைக்க உதவி புரிவதால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
 

வெயில் கால பித்த நோய்களை விரட்டும்.. எலுமிச்சை பழத்தின் மகிமைகள் தெரியுமா?

35

புற்றுநோய் :

இஞ்சியில் இருக்கும் காரமான உட்பொருட்களான ஜின்ஜெரான்கள், ஜின்ஜெரால்கள், ஷோகோல்கள் போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அடியோடு தடுத்து நிறுத்தி அவைகளை அழிக்கும் பணியையும் செய்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகையால் புற்றுநோய் வராமல் தடுக்க இஞ்சி ஜூஸ் செய்து குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

இரைப்பைக் குடல் புற்றுநோய் :

வயிறு சம்மந்தமான தொந்தரவுகள் பசியின்மை, ஜீரண பிரச்சனை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் ஆகியவற்றிக்கு விரைவில் நிவாரணம் அளிப்பதால் இஞ்சி ஜூஸினை தினமும் பருகலாம். மேலும் இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைத்து , வராமல் தடுத்து நிறுத்துகிறது.

45

ஆர்த்ரிடிஸ் வலி:

இஞ்சியில் உள்ள நிவாரணப் பொருட்கள், நாள்பட்ட மூட்டு வலிகளுக்கு மிகச் சிறந்த தீர்வை கொடுக்கும் என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது .ஆகையால் மூட்டு வலி தொந்தரவுகள் உள்ளவர்கள் இஞ்சி ஜூஸினை அடிக்கடி பருகி வர நல்ல மாற்றங்களை காணாலாம்

55

மூளை மேம்படும்:

இஞ்சியில் இருக்கின்ற ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள், நரம்பு மண்டலத்தினை பாதுகாக்கிறது. குறிப்பாக இஞ்சி ஜூஸைக் பருகி வருவதன் மூலம் மூளையில் புரோட்டீன் அளவு நிறைவாக அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் சிறக்கிறது . மூளையில் இந்த புரோட்டீன் அளவு அதிகமாக காணப்பட்டால் மூளை தொடர்புடைய பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

இப்படி பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் இஞ்சி ஜூஸை தினமும் பருகி ஆரோக்கியமாக வாழுங்கள்!

About the Author

DT
Dinesh TG
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 சூப்பர் உணவுகள்
Recommended image2
Hair Growth : முடி வளர்ச்சிக்கு உதவும் 8 ஹேர் கேர் குறிப்புகள்
Recommended image3
Diabetes Affects: ஆண்கள், பெண்களுக்கு நீரிழிவு பாதிப்பு ஏன் வேறுபடுகிறது? மருத்துவர் கூறும் முக்கிய காரணங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved