- Home
- உடல்நலம்
- Nipah Virus: மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ்.. முக்கிய அறிகுறிகள் என்ன? தப்பிக்க இதுதான் ஒரே வழி!
Nipah Virus: மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ்.. முக்கிய அறிகுறிகள் என்ன? தப்பிக்க இதுதான் ஒரே வழி!
Nipah Virus Symptoms: கேரளாவின் கோழிக்கோட்டில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வவ்வால்களிடம் பரவக்கூடியதாக கூறப்படுகிறது. இந்த நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை மிக அதிகம்.

நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?
கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஃபாரூக்கைச் சேர்ந்த 43 வயது நபர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நிபா வைரஸ் எப்படி பரவுகிறது?
தற்போது இவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிபா வைரஸ் என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு ஆபத்தான 'சூனோடிக்' (Zoonotic) வைரஸ் கிருமியாகும். குறிப்பாக வவ்வால்களிடம் பரவக்கூடியதாக கூறப்படுகிறது. இந்த நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை மிக அதிகம்.
அறிகுறிகள் தெரியவர 5 முதல் 14 நாட்கள் வரை
ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்றிய பிறகு, அறிகுறிகள் தெரியவர சுமார் 5 முதல் 14 நாட்கள் வரை ஆகும். இந்த காலகட்டத்தை 'இன்குபேஷன் பீரியட்' (incubation period) என்று சொல்வார்கள்.
முதல் அறிகுறி காய்ச்சல்
காய்ச்சல்தான் இதன் முதல் அறிகுறியாகும். லேசான காய்ச்சலில் தொடங்கி சில நாட்களில் இது தீவிரமாகும். தலைவலி, உடல் வலி, தொண்டை வலி, வாந்தி போன்றவையும் ஏற்படலாம். சிலருக்கு இருமல், வயிற்றுவலி, குமட்டல், பார்வை மங்குதல் கூட வரலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்.
மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம்
நோய் பாதித்தவர்களை உடனிருந்து கவனித்து கொள்பவர்கள் கவனமாக இல்லாவிட்டால், அவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. வைரஸ் பாதித்த வவ்வால்களின் எச்சம் கலந்த பானங்கள், வவ்வால் கடித்த பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலமும் இது பரவும்.
மாஸ்க் அணிவது கட்டாயம்
கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள். வாய் மற்றும் மூக்கை முழுமையாக மூடி மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவும். சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். நோயாளி இருக்கும் இடத்திலிருந்து தள்ளியே இருக்க வேண்டும்.

