MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • breakfast recipes: திடீர் கரென்ட் கட்டா? மிக்ஸி இல்லாமலே 10 நிமிடத்தில் 5 அசத்தல் டிபன்!

breakfast recipes: திடீர் கரென்ட் கட்டா? மிக்ஸி இல்லாமலே 10 நிமிடத்தில் 5 அசத்தல் டிபன்!

காலையில் திடீரென பவர் கட்டால் மிக்ஸி  கிரைண்டர் ஓடாமல் மாவும் தீர்ந்துவிட்டால் கவலை வேண்டாம். கரண்ட் இல்லாத போதும் வெறும் 10 நிமிடத்தில் மிக்ஸி துணையின்றி எளிதாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய 5 அருமையான அவசர கால காலை உணவு ஐடியாக்கள் இதோ உங்களுக்காக!

1 Min read
Author : Priya Velan
Published : Jun 10 2026, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இன்ஸ்டன்ட் கோதுமை தோசை :
Image Credit : Getty

இன்ஸ்டன்ட் கோதுமை தோசை :

மிக்ஸி தேவையில்லை, மாவு புளிக்க வைக்க வேண்டாம்! ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, கொஞ்சம் அரிசி மாவு (மொறுமொறுப்புக்கு), நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து தண்ணி ஊற்றி கரைத்தால் 'இன்ஸ்டன்ட் மாவு' தயார். சூடான தோசைக் கல்லில் ஊற்றினால் 5 நிமிடத்தில் மொறுமொறு தோசை ரெடி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அவல் கார உப்மா :
Image Credit : Getty

அவல் கார உப்மா :

அவலை மிக்ஸியில் பொடிக்கவே வேண்டாம். லேசான சுடுதண்ணீரில் அல்லது சாதாரண தண்ணீரில் 2 நிமிடம் அவலை ஊறவைத்து பிழிந்து கொள்ளவும். கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம், வரமிளகாய் தாளித்து, இந்த அவலை கொட்டி 2 நிமிடம் கிளறினால் லைட்டான, ஹெல்த்தியான அவல் உப்மா தயார்.

Related Articles

Related image1
Healthy Breakfast: டைம் இல்லையா? 5 நிமிஷத்தில் செய்யலாம் ஹெல்தி காலை உணவு!
Related image2
Unhealthy Breakfast: இந்த 5 உணவுகளையும் காலையில் சாப்பிடவே கூடாது.! ஆரோக்கியமான காலை உணவு எது?
35
'ஸ்பைசி பிரெட் டோஸ்ட்' :
Image Credit : Getty

'ஸ்பைசி பிரெட் டோஸ்ட்' :

டோஸ்டர் வேலை செய்யலனா என்ன, தவா இருக்கே! ஒரு முட்டையை உடைத்து ஊற்றி (சைவ பிரியர்கள் கடலை மாவு கரைசல் பயன்படுத்தலாம்) அதில் உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடித்துக் கொள்ளவும். பிரெட்டை அதில் நனைத்து, தோசைக் கல்லில் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவக்க எடுத்தால் சூப்பர் பிரெட் டோஸ்ட் ரெடி.

45
அவசர கால 'சேமியா கிச்சடி' :
Image Credit : Getty

அவசர கால 'சேமியா கிச்சடி' :

ரவா உப்மா கூட சில சமயம் கட்டியாகிவிடும், ஆனால் சேமியா அப்படி ஆகாது. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், தக்காளி, வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு காய்கறி (கேரட் அல்லது பீன்ஸ்) வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சேமியாவை கொட்டி இறக்கினால் கமகம கிச்சடி தயார்.

55
'ஸ்மார்ட் சமையல்' டிப்ஸ்:
Image Credit : Getty

'ஸ்மார்ட் சமையல்' டிப்ஸ்:

கரென்ட் இல்லாத போது சட்னி அரைக்க முடியாது. அதனால் தக்காளி தொக்கு அல்லது பூண்டு தொக்கு எப்போதும் பிரிட்ஜில் ஸ்டாக் வையுங்கள். இட்லிப் பொடி, பருப்புப் பொடி போன்ற 'பொடி' வகைகள் அவசர காலத்திற்கு ஆபத்பாந்தவன்! மிக்ஸி இல்லையென்றாலும் பரவாயில்லை, மத்தைக் கொண்டு தக்காளி, வெங்காயத்தை லேசாக மசித்துக் கூட சமைக்கலாம்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
ஆரோக்கியம்
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சிக்கன், மட்டன், மீன்: எந்த சீசனில் எதை சாப்பிடணும் தெரியுமா?
Recommended image2
மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்தும் 7 எளிய இந்திய உணவுகள்
Recommended image3
Viral Food News: பிரியாணி போடும்போது வர்ற அந்த 'டங் டங்' சத்தம்... பின்னாடி இப்படி ஒரு மேட்டரா?
Related Stories
Recommended image1
Healthy Breakfast: டைம் இல்லையா? 5 நிமிஷத்தில் செய்யலாம் ஹெல்தி காலை உணவு!
Recommended image2
Unhealthy Breakfast: இந்த 5 உணவுகளையும் காலையில் சாப்பிடவே கூடாது.! ஆரோக்கியமான காலை உணவு எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved