Cholesterol : நீங்க தினமும் செய்ற இந்த தப்பால கொலஸ்ட்ரால் எகிறிடும்; இதுல கவனம் தேவை
நீங்கள் தினமும் செய்யும் சில தவறுகளால் உங்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவை ராக்கெட் வேகத்தில் உயர்த்திவிடும். அது என்னென்ன தவறுகள் என்று இங்கு பார்க்கலாம்.

Mistakes That Raise Cholesterol
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் பல்வேறு வழிகளில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். நம்முடைய உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு வடை, பஜ்ஜி, போண்டா, சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்றவை தான் காரணம் என்று நான் நினைப்போம். ஆனால், அதுமட்டுமல்ல நமக்கே தெரியாமல் நாம் தினமும் செய்யும் சில தவறுகளாலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
நார்ச்சத்தை தவிர்ப்பது :
நாம் யாருமே நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நார்ச்சத்துதான் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உணவு எளிதாக ஜீரணிக்க உதவுவது மட்டுமன்றி, கொலஸ்ட்ராலையும் குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே தினமும் உங்களது உணவில் பேரிக்காய், பீன்ஸ் வகைகள், ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் :
நீங்கள் அடிக்கடி எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதனால் இதய நோய் ஆபத்துகளும் அதிகரிக்கும்.
மீண்டும் மீண்டும் உணவை சூடுப்படுத்துதல் :
நம்மில் பெரும்பாலானோர் இந்த தவறை தினமும் செய்கிறோம். அதாவது மீந்தமான சாப்பாட்டை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடுகிறோம். அதுமட்டுமல்லாமல் எண்ணெய் மற்றும் மசாலாக்களுடன் சமைத்து வைத்த உணவை மீண்டும் சூடுப்படித்தி சாப்பிடுவோம். இப்படி சூடுப்படுத்தி சாப்பிட்டால் அதில் இருக்கும் கொழுப்பு அளவு இன்னும் அதிகரித்து தமனிகளில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும். அதுபோல ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தினால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது.
அதிக எண்ணெய் பயன்பாடு :
எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை மிகவும் குறைவாக பயன்படுத்துவது தான் நல்லது. ஏனெனில் இவை உடலில் கலோரிகளை அதிகமாக்கும். இதனால் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும் எனவே எண்ணெய், வெண்ணெய் எப்போது பயன்படுத்தினாலும் அளவோடு பயன்படுத்துங்கள். முடிந்தவரை எண்ணெயை ஊற்றி சமைக்காமல் ஸ்பேஸ் செய்து சமைக்கவும்.
அதிக உப்பு மற்றும் சர்க்கரை :
நீங்கள் அதிக உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக் கொண்டால் உடனே அந்த பழக்கத்தை நிறுத்துங்கள். அதாவது, உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொண்டால் அது ஹைப்பர் டென்ஷனை ஏற்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்பு உள்ளன. அதுபோல சர்க்கரை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
சாஸ் ;
சிலர் சமைக்கும்போது உணவின் சுவையை அதிகரிக்க தக்காளி சாஸ், சோயா சாஸ் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் அவையும் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். அதுபோல தற்போது ட்ரெஸ்ஸிங், டிப்பிங் கான்செப்ட் சமீபத்தில் மக்கள் மத்தியில் ட்ரெண்டாகி இருக்கிறது. ஆனால் இவையும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கச் செய்யும். இவற்றில் பதப்படுத்தப்பட்ட சோடியம், சுவைக்காக சர்க்கரை, ஆரோக்கியமாக கொழுப்பு எண்ணெய் வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும்.
மேலே சொல்லப்பட்டுள்ள தவறுகளை நீங்கள் தினமும் செய்து கொண்டிருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். உங்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகதை தடுக்கலாம்.

