Weight Loss : லெமன் டீ vs கிரீன் டீ; எடையை குறைக்க எது பெஸ்ட் தெரியுமா?
லெமன் டீ அல்லது கிரீன் டீ எதை அருந்துவது எடையை குறைக்க உதவும் என்பதை இங்கு காணலாம்.

எடையை குறைக்க லெமன் டீ அல்லது கிரீன் டீ
காலையில் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. டீ குடித்தால் தான் அந்த நாளே தொடங்கும். ஆனால் பால், சர்க்கரை சேர்த்த சாதாரண டீ உடல் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம். இந்தப் பதிவில் லெமன் டீ அல்லது கிரீன் டீ எதை அருந்துவது எடையை குறைக்க உதவும் என்பதை காணலாம்.
லெமன் டீ வளர்சிதை மாற்றத்தை கொஞ்சம் அதிகரிக்கும். ஆனால் பெரிய மாற்றங்களை செய்யாது. ஆனால் கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள், காஃபின் வளர்சிதை மாற்றத்தை சற்று அதிகமாக அதிகரிக்கும். கொழுப்பை குறைக்க உதவும்.
பசி தூண்டல்
லெமன் டீ வயிறு நிரம்பிய உணர்வை தரும். சாப்பாட்டிற்கு முன்பாக குடித்தால் உடல் நீரேற்றமாக இருக்கும். பசியை குறைத்து அதிகம் சாப்பிடுவதை தடுக்கும். கிரீன் டீயில் உள்ள காஃபின் பசியைக் குறைக்க உதவும் என்றாலும் லெமன் டீ அளவுக்கு இல்லை.
நச்சு நீக்கம்
லெமன் டீ குடிப்பதால் செரிமானம், உடலில் உள்ள நச்சு நீக்கம் மேம்படும். கிரீன் டீயில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தினாலும் நச்சு நீக்கம் செய்வதில்லை.
கொழுப்பை எரித்தல்
லெமன் டீயில் நேரடியாக கொழுப்பை எரிக்கும் எவ்வித பண்புகளும் இல்லை. ஆனால் கிரீன் டீயில் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை ஊக்குவிக்கும் சேர்மங்கள் காணப்படுகின்றன.
எப்போது குடிக்கலாம்?
லெமன் டீ காலையில் அருந்த சிறந்த தேர்வாக இருக்கும். உணவுக்குப் பின் அல்லது உடற்பயிற்சிக்கு முன் குடிக்கலாம். இதனால் ஆற்றல் அதிகமாகும். அதிக கொழுப்பை எரிக்க கிரீன் டீ சிறந்தது.
லெமன் டீ vs கிரீன் டீ;
எடையை குறைக்க நினைத்தால் கிரீன் டீ தான் அதற்கு பெஸ்ட் சாய்ஸ். சர்க்கரை, பால் போன்றவை சேர்க்காத காரணத்தால் கிரீன் டீயில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு கிளாஸ் டீயில் 2 முதல் 3 கலோரிகள் தான் இருக்கும். அடிப்படையில் லெமன் டீயில் எந்த கலோரிகளும் இல்லை. நீங்கள் அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்குறீர்கள் என்றால் மட்டுமே இது பொருந்தும். சுவைக்காக தேன் அல்லது சர்க்கரை சேர்த்தால் அது நிச்சயம் எடையை கூட்டும்.