தூக்கமின்மை பிரச்சனையா? மனதில் கொள்ள வேண்டியவை..!!
ஹார்மோன்கள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது தூக்கக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னை உருவாகிறது
ரத்தத்தில் போதுமான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத போது இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை நோய் ஏற்படுகிறது. இரத்த சிவப்பணுக்களில் போதுமான ஆக்ஸிஜனை (ஹீமோகுளோபின்) எடுத்துச் செல்ல உடலுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. அதில் இடர் ஏற்படும் போது, சோம்பல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் நிலவும்.
ஹார்மோன்கள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளில் ஏதேனும் ஏற்ற இறக்கங்கள் தூக்கக் கோளாறுகள் உள்ளிட்ட தொந்தரவுகளை ஏற்படுத்தும். கால் மூட்டு இயக்கத்தில் பிரச்னை கொண்டவர்கள், இது தூக்க பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இந்த கால் வலி சர்க்காடியன் தாளத்துடன் தொடர்புடையதாகும். இதன்காரணமாகவே மாலை மற்றும் இரவில் மட்டுமே வலி ஏற்படுகிறது.
தூக்கமின்மையை போக்க என்ன செய்ய வேண்டும்
தூக்கம் மற்றும் எழுந்திருக்கும் நேரங்களை மாற்ற முயற்சி செய்யுங்கள். முடிந்தவரை சீக்கரம் தூங்கி, சீக்கரமாக எழுந்திருக்க முயலுங்கள்.
இறைச்சி, முட்டை மற்றும் இலை கீரைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். குறிப்பாக மாலை 6 மணிக்குப் பிறகு காஃபின் கலந்த பானங்களைத் தவிர்த்திடுங்கள்.
ஆல்கஹால் மற்றும் நிகோடினை அறவே தவிருங்கள். சோஷியல் ட்ரிக்கிங் கூட வேண்டாம். தூக்கமின்மை பிரச்னையும் போதைப் பழக்கமும் ஒன்று சேர்ந்தால் உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை கொண்டு வரும்.
சிட்ரஸ் பழங்கள், ப்ரோக்கோலி, தக்காளி மற்றும் தர்பூசணி போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்கள்.
ஆரோக்கியமாக இருக்க தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உங்கள் மொபைல் மற்றும் மடிக்கணினியை அணைத்திடுங்கள். இதுவே பாதி பிரச்னையை சரி செய்துவிடும்.