MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Knuckle Cracking: விரல் சொடக்கும்போது 'டக் டக்'னு சத்தம் வருவது ஏன்? ஆபத்தா? சயின்ஸ் சொல்வது என்ன?

Knuckle Cracking: விரல் சொடக்கும்போது 'டக் டக்'னு சத்தம் வருவது ஏன்? ஆபத்தா? சயின்ஸ் சொல்வது என்ன?

Knuckle Cracking: விரல் சொடக்கும்போது 'டக் டக்'னு சத்தம் வருவது ஏன்? அடிக்கடி விரல் சொடுக்குவதால் மூட்டு வாதம் வருமா? என்பதற்கான விரிவான விளக்கத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 11 2026, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விரல் சொடுக்குவது ஆபத்தா?
Image Credit : AI

விரல் சொடுக்குவது ஆபத்தா?

நம்மில் பலருக்கும் சிறு வயது முதலே இருக்கும் பழக்கங்களில் ஒன்று, விரல்களை 'டக் டக்' எனச் சொடக்குவது. மன அழுத்தம், சலிப்பு எனப் பல காரணங்களுக்காகச் செய்தாலும், "இப்படி அடிக்கடி செய்தால், வயதான காலத்தில் மூட்டுவாதம் வந்துவிடும்" என்ற எச்சரிக்கையையும் நிச்சயம் கேட்டிருப்போம். உண்மையில், விரல் சொடக்குவதற்கும் மூட்டுவாதத்திற்கும் தொடர்பு உள்ளதா?

சோதனை செய்த அமெரிக்க மருத்துவர்

இந்தக் கேள்விக்கு மிகச் சிறந்த உதாரணமாக அமெரிக்க மருத்துவர் டொனால்ட் அங்கரின் கதை சொல்லப்படுகிறது. தன் தாய் மற்றும் உறவினர்களின் எச்சரிக்கையைச் சோதிக்க விரும்பிய அவர், சுமார் 50 ஆண்டுகளாகத் தனது இடது கை விரல்களை மட்டும் தினமும் சொடக்கி வந்துள்ளார். வலது கையை அவர் ஒப்பிடப் பயன்படுத்தினார்.

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, தனது 72வது வயதில் அவர் இரு கைகளையும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, இரண்டு கைகளிலும் மூட்டுவாதத்திற்கான அறிகுறிகள் இல்லை என்பது தெரியவந்தது. இந்த சுவாரஸ்யமான சுய பரிசோதனைக்காக அவருக்கு Ig Nobel பரிசும் வழங்கப்பட்டது. ஆனாலும், இது ஒரு தனிநபர் ஆய்வு என்பதால், இதை மட்டுமே வைத்து மருத்துவ முடிவுக்கு வர முடியாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விரல் சொடுக்கும்போது என்னதான் நடக்கிறது?
Image Credit : Getty

விரல் சொடுக்கும்போது என்னதான் நடக்கிறது?

நமது விரல் மூட்டுகளுக்குள் 'சினோவியல்' என்ற திரவம் உள்ளது. இது மூட்டுகள் எளிதாக அசைய உதவும் ஒரு மசகு எண்ணெய் போன்றது. நாம் விரல்களை வளைக்கும்போது அல்லது இழுக்கும்போது, மூட்டுகளுக்குள் இருக்கும் அழுத்தம் திடீரெனக் குறைந்து, இந்தத் திரவத்தில் கரைந்துள்ள வாயுக்கள் குமிழிகளாக உருவாகி உடைகின்றன. அந்த 'டக்' என்ற சத்தம் இதனால்தான் ஏற்படுகிறது.

எனவே, விரல் சொடக்கும்போது எலும்புகள் உரசுகின்றன அல்லது தேய்கின்றன என்பது தவறான கருத்து. இது ஒரு இயல்பான உடலியல் நிகழ்வுதான். பல ஆய்வுகளும், சாதாரணமாக விரல் சொடக்கும் பழக்கத்திற்கும் 'ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்' எனப்படும் சிதைவு மூட்டுவாதத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றே கூறுகின்றன.

34
மூட்டு வாதத்திற்கு அறிவியல் சான்று இல்லை
Image Credit : Getty

மூட்டு வாதத்திற்கு அறிவியல் சான்று இல்லை

ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் என்பது வயது, உடல் பருமன், மரபியல் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் காயங்கள் போன்ற பல காரணிகளால் ஏற்படுகிறது. விரல் சொடக்கும் பழக்கம் அதன் முக்கியக் காரணியாக இதுவரை கண்டறியப்படவில்லை. அதேபோல, இந்தப் பழக்கத்தால் கைகளின் பிடிமான சக்தி குறையும் என்பதற்கும் உறுதியான அறிவியல் சான்றுகள் இல்லை.

44
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்
Image Credit : Getty

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்

விரல் சொடக்குவது பெரும்பாலும் பாதிப்பில்லாதது என்றாலும், கழுத்து அல்லது முதுகுப் பகுதியை வலுக்கட்டாயமாகத் திருப்புவது முற்றிலும் வேறுபட்டது. கழுத்துப் பகுதியில் தண்டுவடம், முக்கிய நரம்புகள் மற்றும் மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் இருப்பதால், அங்கு சுயமாக அழுத்தம் கொடுப்பது கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, கழுத்து மற்றும் முதுகு விஷயத்தில் இந்தத் தர்க்கத்தைப் பயன்படுத்தவே கூடாது.

விரல் சொடக்கும்போது சத்தத்துடன் சேர்த்து வலி, வீக்கம், விரல்களை மடக்க முடியாத நிலை போன்ற அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம். குறிப்பாக, வலியுண்டாகும் அளவுக்கு மூட்டுகளை இழுப்பதையும், முறுக்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆக, உங்கள் 'டக் டக்' பழக்கத்தால் மட்டும் மூட்டுவாதம் வந்துவிடுமோ என்ற பெரிய கவலை தேவையில்லை என்பதே தற்போதைய மருத்துவ உலகின் கருத்தாக உள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Banana Malpua : வாழைப்பழத்தை வைத்து இப்படி ஒரு ஸ்வீட் செய்ய முடியுமா? அசத்தலான வாழைப்பழ மால்புவா ரெசிபி!
Recommended image2
Rasmalai : தீபாவளிக்கு வீட்டிலேயே ர‌ச‌ம‌லாய் செய்வது எப்படி? வாயில் வைத்ததும் கரையும் இந்த ஸ்வீட் ரெசிபி!
Recommended image3
Paruppu poli : வாயில் வைத்ததும் கரையும் பருப்பு போளி.. பண்டிகை ஸ்பெஷல் இனிப்பை வீட்டிலேயே செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
விரல் நுனியின் தோல் உரிவதற்கு காரணம் தெரியுமா? இதை பண்ணா தடுக்கலாம்
Recommended image2
Personality Test : இதைவெச்சு கூட குணத்தை கண்டிபிடிக்கலாமா? கட்டை விரல் ரகசியம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved