MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Cooking Oil: பொரித்த எண்ணெய்யில் மீண்டும் சமைக்கலாமா? இல்லத்தரசிகளுக்கு நிபுணர்கள் வார்னிங்!

Cooking Oil: பொரித்த எண்ணெய்யில் மீண்டும் சமைக்கலாமா? இல்லத்தரசிகளுக்கு நிபுணர்கள் வார்னிங்!

Cooking Oil: கடையில் இருந்து வாங்கி வரும் சமையல் எண்ணெய் எப்போது கெட்டுப்போகும்? பொரித்த எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 20 2026, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சமையல் எண்ணெய் எப்போது கெட்டுப்போகும்?
Image Credit : AI

சமையல் எண்ணெய் எப்போது கெட்டுப்போகும்?

பால், பிரெட் மாதிரி எண்ணெய் 3-4 நாளில் கெட்டுப்போகாது. ஆனால், ரொம்ப நாள் பயன்படுத்தவும் முடியாது. காற்று, வெளிச்சம், வெப்பம் படும்போது ஆக்சிஜனேற்றம் (oxidation) அடைந்துவிடும். பழைய எண்ணெயை பயன்படுத்தினால் உடனடியாக எந்த பாதிப்பும் தெரியாது. ஆனால், தொடர்ந்து பயன்படுத்தினால், அதில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ் (free radicals) உடலுக்குக் கேடு விளைவிக்கும்.

எந்த எண்ணெய் எவ்வளவு நாள் பாதுகாப்பானது?

ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஆயுட்காலம் வேறுபடும். ரீஃபைண்ட் வெஜிடபிள் அல்லது கனோலா எண்ணெய் பிரிக்காமல் இருந்தால் 1-2 வருடம் வரை வரும். பிரித்த பிறகு 6-12 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், பேக்கில் 24 மாதங்கள் வரை கெடாது. பிரித்த பின் 3-6 மாதங்கள் தான் அதன் ஆயுள். 

தேங்காய் எண்ணெயை சுமார் 2 வருடம் வரை பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் (Sesame oil) பிரித்த பின் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஆளிவிதை எண்ணெய் (Flaxseed oil) பிரிக்காமல் இருந்தால் 6-8 மாதங்கள் வரும், பிரித்த பின் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. அவகேடோ எண்ணெய் பிரித்த பின் சுமார் 6 மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.

இதையும் படிங்க: Water Tank Cleaning: வாட்டர் டேங்கை சிரமமின்றி சில நிமிடங்களில் சுத்தம் செய்ய 'ஸ்மார்ட்' டிப்ஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எண்ணெய் கெட்டுப்போனதை எப்படி கண்டறிவது?
Image Credit : Getty

எண்ணெய் கெட்டுப்போனதை எப்படி கண்டறிவது?

முதலில் எண்ணெயின் வாசனையைச் சோதித்துப் பாருங்கள். புளித்த அல்லது ஒருவிதமான விசித்திரமான வாசனை வந்தால், அது கெட்டுப்போயிருக்கலாம். சுவை கசப்பாக, புளிப்பாக அல்லது சோப்புப் போல இருந்தால் பயன்படுத்த வேண்டாம். எண்ணெயின் நிறம் மாறுவது, பாத்திரத்தின் அடியில் துகள்கள் படிவது, அல்லது வழக்கத்தை விட திக்காக மாறுவது போன்றவையும் எச்சரிக்கை அறிகுறிகளே.

எண்ணெய் வாங்கும் போது இதை செய்யுங்கள்

எண்ணெய் வாங்கும்போது, அதன் பேக்கில் உள்ள 'Best Before' அல்லது 'Use By' தேதியை கண்டிப்பாகப் பாருங்கள். பாட்டிலைத் திறந்த தேதியை நினைவில் வைத்துக்கொண்டால், சரியான காலத்திற்குள் எண்ணெயைப் பயன்படுத்திவிடலாம்.

இதையும் படிங்க: AC Maintenance Tips: ஏசி கரண்ட் பில் எகிறுகிறதா? நீங்க செய்யும் 'இந்த' 1 தவறை உடனே நிறுத்துங்க!

Related Articles

Related image1
Cooking Tips: இனி சமையல் எண்ணெய் செலவு பாதியாக குறையும்.! இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்!
Related image2
Cooking Oil : கடலை எண்ணெய் OR சூரியகாந்தி எண்ணெய்? - எதுல சமைப்பது பாதுகாப்பானது?
34
கெட்டுப்போகாமல் சமையல் எண்ணெய்யை எப்படி சேமிப்பது?
Image Credit : Getty

கெட்டுப்போகாமல் சமையல் எண்ணெய்யை எப்படி சேமிப்பது?

சூரிய வெளிச்சம் படாமல் வைப்பது: எண்ணெயை நேரடி சூரிய வெளிச்சம் படும் ஜன்னல் ஓரங்களிலோ அல்லது சமையல் கேஸ் அடுப்புக்கு அருகிலோ (வெப்பம் படும் இடத்தில்) வைக்கக் கூடாது.

சரியான பாத்திரங்கள்: பிளாஸ்டிக் பாட்டில்களை விட இருண்ட நிற கண்ணாடி பாட்டில்கள் அல்லது ஸ்டீல் பாத்திரங்களில் சேமிப்பது ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கும்.

மூடியை சரியாக மூடுதல்: காற்று புகாதவாறு பாட்டிலின் மூடியை எப்போதும் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

44
மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெயின் ஆபத்துகள்
Image Credit : Getty

மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெயின் ஆபத்துகள்

புகைப்புள்ளி குறையும்: ஒருமுறை பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடாக்கும் போது, அதன் புகைப்புள்ளி விரைவாக புகைய ஆரம்பிக்கும்.

நச்சுத்தன்மை: எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது அதில் டிரான்ஸ் ஃபேட் மற்றும் அக்ரோலின் போன்ற நச்சுப் பொருட்கள் உருவாகி, இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகப்படுத்தும்.

பொரித்த எண்ணெய்யை எத்தனை முறை பயன்படுத்தலாம்?

பொரித்த எண்ணெயை அதிகபட்சமாக ஒருமுறை மட்டுமே (அதுவும் வடிகட்டி, 1-2 நாட்களுக்குள்) தாளிப்பதற்குப் பயன்படுத்தலாம். மீண்டும் பொரிப்பதற்குப் பயன்படுத்தவே கூடாது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹோட்டல் ஸ்டைலில் டீ குடிக்கணுமா... அப்போ இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க
Recommended image2
மழை பெய்தாலே பஜ்ஜி சாப்பிட தோணுதா? ஏன் தெரியுமா?
Recommended image3
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
Related Stories
Recommended image1
Cooking Tips: இனி சமையல் எண்ணெய் செலவு பாதியாக குறையும்.! இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்!
Recommended image2
Cooking Oil : கடலை எண்ணெய் OR சூரியகாந்தி எண்ணெய்? - எதுல சமைப்பது பாதுகாப்பானது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved