வாழைப்பழம் உடல் எடையை குறைக்குமா? அதிகரிக்குமா? அதுபற்றிய உண்மை இதோ!
Banana Benefits : வாழைப்பழம் உடல் எடையை குறைக்குமா? அல்லது அதிகரிக்க உதவுமா? என்ற இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் காணலாம்.

வாழைப்பழம் உடல் எடையை குறைக்குமா? அதிகரிக்குமா? அதுபற்றிய உண்மை இதோ!
வாழைப்பழம் மிகவும் சுலபமாக கிடைக்க கூடிய பழமாகும். குழந்தைகள் முதல பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாகும். வாழைப்பழம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். ஆனால் எடை இழப்புக்கு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? இல்லையெனில், இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்குமா? ஏனெனில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இவை இரண்டிற்கும் வாழைப்பழம் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும். இப்போது வாழைப்பழம் எடையை குறைக்கும் பழமா அல்லது எடையை அதிகரிக்கும் பழமா என்ற கேள்விக்கான பதில் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்கள்:
நடுத்தர வாழைப்பழம் ஒன்றில் கலோரிகள் 15, மாவுச்சத்து 27 கிராம் உள்ளன. இது தவிர 3 கிராம் நார்ச்சத்து ஒரு கிராம் புரதம் இருக்கும். அதேசமயம் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. முக்கியமாக இதில் கொழுப்பு சத்து இல்லை.
இதையும் படிங்க: தவறிக் கூட வாழைப்பழத்துடன் இந்த 5 உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்
வாழைப்பழம் எடையை குறைக்குமா அல்லது அதிகரிக்குமா?
உண்மை என்னவென்றால், வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும். அதேசமயம் எடையை குறைக்கவும் உதவும். இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் வாழைப்பழத்தை எப்போது, எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது பொறுத்துதான் அதன் பலன்கள் மாறுபடும். வாழைப்பழத்தை நீங்கள் மிதமாக எடுத்துக் கொண்டால், அதில் இருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து எடை இழப்புக்கு உதவும் மற்றும் அதன் முழு ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.
இதையும் படிங்க: இரவு தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? ஆய்வுகள் சொல்வது இதுதான்!
உடல் எடையை குறைக்க வாழைப்பழம் எப்படி உதவுகிறது?
பொதுவாக கலோரிகள் குறைவாக உள்ள உணவை தான் எடை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக் கொள்வார்கள் வாழைப்பழம் அவற்றில் ஒன்று இதை சாப்பிடுவதன் மூலம் உடலில் கலோரிகள் அளவு அதிகரிப்பதில்லை ஏனெனில் வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய வைத்திருக்கும் மற்றும் பசியை கட்டுப்படுத்தும். முக்கியமாக இதில் இயற்கையாகவே இனிப்பு உள்ளதால் இனிப்பு சாப்பிடும் உணர்வை தூண்டது. எனவே ஊட்டச்சத்து நிரம்பிய வாழைப்பழத்தை மிதமாக எடுத்துக் கொண்டால் உடல் எடையும் குறைக்கலாம் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
வாழைப்பழம் உடல் எடையை அதிகரிப்பது எப்படி?
வாழைப்பழத்தில் மிகுதியான அளவு மாவுச்சத்து உள்ளன மாவுச்சத்து நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். ஆனால் இதை அளவாக எடுத்துக் கொண்டால் எந்தவித பிரச்சினையும் இல்லை. இதுவே அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடலில் மாவுச்சத்து சேமிக்கப்பட்டு அது உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதாவது உடல் எடை அதிகச் செய்யும்.