45 நாட்கள் சர்க்கரையே சேர்க்காமல் இருந்தால் 'உண்மையில்' பலன் கிடைக்குமா?
No Sugar Challenge Benefits : நாம் அன்றாட வாழ்வில் சர்க்கரையே எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என இந்தப் பதிவில் காணலாம்.

45 நாட்கள் சர்க்கரையே சேர்க்காமல் இருந்தால் 'உண்மையில்' பலன் கிடைக்குமா?
தினமும் நாம் செய்யும் சிறுசிறு மாற்றங்கள் கூட வாழ்வில் பெரிய மாற்றங்களுக்கு காரணமாக இருக்கும். அந்த வகையில் சர்க்கரை இல்லாத வாழ்க்கை முறைக்கு சமூக ஊடகங்களில் வரவேற்பு கிடைக்கிறது. சர்க்கரை சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் பார்வை கூர்மையாகும், சருமம் பளபளப்பாகும், எடை குறையும் உள்ளிட்ட பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.'45' சர்க்கரை எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலில் நல்ல மாற்றங்கள் வருவதாகக் கூறி இந்த சவாலை பின்பற்ற தூண்டப்படுகின்றனர். இரத்த அழுத்தம் சீராவது, கொழுப்பை குறைதல் ஆகிய பல நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அவை உண்மையா? என இங்கு காண்போம்.
எவ்வளவு சர்க்கரை?
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு நபர் நாளொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் (சுமார் 10 கிராம்) சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என கூறுகிறது. தற்போது சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் அதிகமாகி வருவதால் சர்க்கரை சேர்க்காமல் வாழ மக்கள் வழிகாட்டப்படுகிறார்கள். ஆனால் சர்க்கரையை மட்டும் குறைப்பதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என சொல்லிவிட முடியாது. நீங்கள் சாப்பிடும் அரிசி, சப்பாத்தி போன்றவை சர்க்கரையாக செயல்படுகிறது. ஆகவே உடற்பயிற்சியும், நல்ல உணவு பழக்கமும் கடைபிடிக்க வேண்டும்.
சர்க்கரையே சேர்க்காமல் இருந்தால்
நாம் எவ்வளவு சக்கரையை எடுத்துக் கொள்கிறோம் என்பதில் எப்போதுமே கவனம் கொள்ள வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளும் அரிசி உள்ளிட்ட உணவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட்களையும் கவனிக்க வேண்டியது அவசியம். சிலர் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையை பயன்படுத்தும் பழக்கம் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இவற்றிற்குள் பெரிதும் மாற்றம் இல்லை. நீங்கள் உங்களுடைய உணவுப் பழக்கத்தை மாற்றும் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. திடீரென ஒட்டுமொத்த உணவு பழக்கத்தையும் உங்களுடைய சுய விருப்பத்தின் பெயரில் மாற்றும்போது சில நேரங்களில் உடல் நலசிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
இதையும் படிங்க: மறைக்கப்பட்ட சர்க்கரை கொண்ட 5 பொதுவான உணவுகள்! கண்டிப்பா சாப்பிடவே கூடாது!
சர்க்கரை இல்லாத சவால்!
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சில உணவுப் பொருள்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் சர்க்கரையும் ஒன்று. நாம் அதிகமான அளவில் சர்க்கரை கலந்த உணவுகளை சாப்பிடும்போது உடல் எடையை குறைப்பதில் சிக்கல் உண்டாகிறது. அதிக தேநீர், காபி பழக்கம் உங்களுடைய உடல் நலத்திற்கு மறைமுகமாக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகவே அளவாக உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு இரண்டு வேளைக்கு மேலாக காபியோ தேநீரோ அருந்துவதை வழக்கப்படுத்தாதீர்கள். இனிப்பு பண்டங்களை மதியம் உணவிற்கு பின் உண்பது நல்லது. இரவிலோ காலையிலோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சர்க்கரை இல்லாத காபி காலையில குடிச்சி தான் பாருங்களே; 'இந்த' நன்மைகள் கிடைக்கும்!
காலை என்ன சாப்பிடலாம்?
காலையில் ஆவியில் வேகவைத்த இட்லியை சாம்பார் வைத்து சாப்பிடலாம். ஆப்பம் சாப்பிடலாம். ஆனால் கிழங்கு வகைகள், அரிசி உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது தவிர்க்கலாம். இவை அதிக கார்போஹைட்ரேட் கொண்டுள்ளன. இரவில் 8 மணிக்கு முன்பாக சாப்பிட வேண்டும். படுக்கைக்கு செல்லும் 3 மணிநேரத்திற்கு முன்பு சாப்பிடுவது நல்லது. இப்படி ஒட்டுமொத்த உணவு பழக்கத்தையும் மாற்றிவிட்டு சர்க்கரை இல்லாத சவாலை பின்பற்றலாம். ஆனாலும் நிபுணரிடம் ஆலோசியுங்கள்.