- Home
- உடல்நலம்
- Gut Health : உடற்பயிற்சி தான் ஆரோக்கியம்னு நினைக்குறீங்களா? இந்த '5' பழக்கங்கள் இருந்தா எல்லாமே வேஸ்ட்!!
Gut Health : உடற்பயிற்சி தான் ஆரோக்கியம்னு நினைக்குறீங்களா? இந்த '5' பழக்கங்கள் இருந்தா எல்லாமே வேஸ்ட்!!
உடலை நஞ்சு கூடாரமாக்கும் 5 பழக்கங்களை தவிர்த்துவிட்டாலே நாம் மருத்துவர்களிடம் போக வேண்டிய தேவை படிப்படியாக குறைந்துவிடும்.

Toxins and Gut Health
நாம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சிகள் செய்வதுதான் முக்கியம் என நினைக்கிறோம். ஆனால் அதைத் தவிரவும் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பேண நாம் எவையெல்லாம் செய்யக் கூடாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு தெரியாமலே சில தீங்கு விளைவிக்கும் உணவுகளை உட்கொள்கிறீர்கள். அதில் உள்ள இரசாயனங்கள் குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும்.
நான்ஸ்டிக் பாத்திரங்கள்
உங்களுடைய வீட்டில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவது உடலுக்கு ஏற்றதல்ல. அதில் உள்ள பெயிண்ட் மோசமான ரசாயனமாகும். தொடர்ந்து நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தினால் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கும். இதில் பூசப்பட்டுள்ள டெஃப்ளான் (PTFE) சமைக்கும்போது கீறப்படுவதாலும், சமைக்கும்போது அதிக வெப்பத்திலும் தீங்கு செய்யும் சேர்மங்களை வெளியிடும். இது உணவில் கலந்து உடலுக்குள் செல்லும் வாய்ப்புள்ளது. ஆகவே நான்ஸ்டிக் இல்லாமல், பீங்கான், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.
சர்க்கரைக்கு மாற்று
அன்றாட வாழ்வில் வெள்ளை சர்க்கரையை குறைக்கும் எண்ணத்தில் செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்ளும் நபரா நீங்கள்? அது நல்லதல்ல. செயற்கை இனிப்புகள் குடல் பாக்டீரியா, இரத்த சர்க்கரை மற்றும் பசியின்மை ஆகியவற்றின் சிக்னல்களை குழப்பலாம். இது உங்கள் உடல்நலத்தை மோசமாக்கும். அதற்கு பதிலாக இனிப்பு உணவுகளை உண்ணத் தோன்றும்போது பழங்களை உண்ணலாம்.
தண்ணீரில் நச்சுகள்
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள பிஸ்பெனால் ஏ (பிபிஏ) மாதிரியான இரசாயனங்கள் வெப்பத்திற்கு வினைபுரிந்து வெளிப்படலாம். பிபிஏ இல்லாத பிளாஸ்டிக் பொருள்களிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் கலவைகள் காணப்படலாம். அதனால் ஸ்டீல் அல்லது கண்ணாடி தண்ணீர் பாட்டில்களை பயப்படுத்துங்கள்.
தின்பண்டங்கள்
சிப்ஸ், பொரித்த தின்பண்டங்கள் போன்றவை அதிக எண்ணெய்கள், மசாலாக்கள் நிறைந்தவை. இவை குடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும். பேக் செய்த பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட பேக்கரி உணவுகள் குடலுக்கு சுத்தமாக ஏற்றவை அல்ல. வீட்டில் பயிறு வகைகள், பழங்கள், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். வீட்டில் பார்கார்ன் தயாரித்தும் உண்ணலாம். நீங்கள் வாங்கும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருளில் 5-க்கும் மேற்பட்ட வாசிக்கக் கடினமான சேர்மானங்கள் இருந்தால் அதை தவிருங்கள்.
கவனம்!
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரைட், நைட்ரேட் ஆகியவை உள்ளன. இவை குடல் அழற்சி, நல்ல பாக்டீரியா சீர்குலைவு, பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது. எப்போதும் இறைச்சிகளை புதிதாக வாங்கி சமைத்து உட்கொள்ள வேண்டும்.