- Home
- உடல்நலம்
- Winter Kidney Care : கிட்னி ஆரோக்கியம் பாதிக்காம இருக்கனுமா? குளிர்காலத்துல இந்த 'தப்ப' செய்யாதீங்க..
Winter Kidney Care : கிட்னி ஆரோக்கியம் பாதிக்காம இருக்கனுமா? குளிர்காலத்துல இந்த 'தப்ப' செய்யாதீங்க..
உங்களது கிட்னி ஆரோக்கியமாக இருக்க குளிர் காலத்தில் சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

Winter Kidney Care
குளிர்காலம் வந்தாலே குளிரால் உடலில் சில மாற்றங்கள் நடக்கும். பொதுவாக இந்த சீசனில் வெப்பநிலை குறையும் போது தாகம் எடுக்காது. இதனால் நாம் குறைவாக தான் தண்ணீர் குடிப்போம். சிறுநீரகப் பிரச்சனைக்கு குறைவாக தண்ணீர் குடிப்பது தான் முக்கிய காரணம். இத்தகைய சூழ்நிலையில், கிட்னி ஆரோக்கியமாக இருக்க குளிர் காலத்தில் என்னென்ன தவறுகள் செய்யக் கூடாது என்று இங்கு பார்க்கலாம்.
Kidney Care in Winter
குளிர்காலத்தில் தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கும். அதுபோல இந்த சீசனில் பதப்படுத்தப்பட்ட மற்றும் உப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவது சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் குளிர் காரணமாக உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது வளர்ச்சியை மாற்றத்தை பாதிக்கும்.
யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்?
வேலையை பொறுத்து தண்ணீரின் அளவு மாறுபடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏசி அறையில் வேலை செய்பவர்கள் ஒருநாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீரும், மற்றவர்கள் 3-4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
குளிர்ந்த நீர் குடிக்காதீங்க!
குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் குடிப்பதற்கு பதிலாக சூடான நீர் குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் கழிவுகளை வெளியேற்றும். செரிமானமும் மேம்படும்.
உணவு விஷயத்தில் கவனம்!
குளிர்காலத்தில் அதிகப்படியான உப்பு எடுத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் அளவு அதிகரிக்கும். மேலும் சிறுநீரக கற்களுக்கும் வழி வகுக்கும். அதுபோல கீரை, பீட்ரூட், சாக்லேட் மற்றும் அதிகப்படியான தேநீர் போன்ற ஆக்ஸிலேட் நிறைந்த உணவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். இவற்றிற்கு பதிலாக நட்ஸ்,கள் விதைகள், கொட்டைகள் உள்ளிட்ட சீரான உணவுகளை சாப்பிடுங்கள்.

