- Home
- உடல்நலம்
- Parenting Tips : குழந்தைங்க காய்ச்சல், தலை வலியால் துடித்தால் உடனே இப்படி செய்ங்க! ரிலாக்ஸ் ஆவாங்க
Parenting Tips : குழந்தைங்க காய்ச்சல், தலை வலியால் துடித்தால் உடனே இப்படி செய்ங்க! ரிலாக்ஸ் ஆவாங்க
உங்கள் குழந்தைக்கு காய்ச்சலுடன் தலைவலி வந்தால் வலியை குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Kids Headache Home Remedies
தலைவலி சிறியோர் முதல் பொரியோர் வரை என அனைவருக்கும் வரும். ஒற்றைத் தலைவலி சில வகை உணவுகள் , பிற வாசனைகள் போன்ற பல காரணங்களால் தலைவலி வரலாம். அதுபோல காய்ச்சல் நேரத்தில் சைனஸ் தொற்று, ஜலதோஷம், தலையில் நீர் கோர்வை போன்றாலும் தலைவலி ஏற்படும். காய்ச்சல் சமயத்தில் வரும் தலைவலிகள் குழந்தைகள் தலைவலியால் ரொம்பவே அவதிப்படுவார்கள். எனவே, இந்த பதிவில் குழந்தைகளும் காய்ச்சலுடன் வரும் தலைவலியை குறைக்க சில வீட்டு வைத்திய முறைகள் குறித்து காணலாம்.
உடலில் நீரேற்றமாக வைப்பது :
பொதுவாக குழந்தைகள் காய்ச்சலின் சமயத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். எனவே அவ்வப்போது அவர்களுக்கு தண்ணீர், பழசாறுகள் குடிக்க கொடுங்கள். மேலும் சீரகத் தண்ணீர் போன்ற எலக்ட்ரோ பானங்களும் கொடுக்கலாம். குழந்தைகள் உடலை நீரேற்றமாக வைத்தால் வலி சற்று குறையும். காய்ச்சலும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
மசாஜ் செய்யலாம் :
காய்ச்சல் வந்தாலே கூடவே தலைவலி வந்துவிடும். இந்த சமயத்தில் வலியை குறைக்க மசாஜ் செய்யலாம். இதற்கு உங்களது உள்ளங்கையால் குழந்தையின் நெற்றியின் மீது வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். கழுத்து, தோள்பட்டையில் கூட மசாஜ் செய்தால் தலைவலி குறையும்.
தளர்வான பயிற்சிகள் :
சற்று வளர்ந்த அல்லது பதின்ம வயது டீனேஜ் பிள்ளைகளுக்கு இந்த தளர்வு பயிற்சி கை கொடுக்கும். இதற்கு குழந்தைகளை வசதியாக உட்கார வைத்து சுவாசப்பயிற்சி செய்ய சொல்லலாம். இந்த பயிற்சி அவர்களுக்கு நல்ல உணர்வை கொடுக்கும். மேலும் வலியை நிர்வகிக்கவும் செய்யும். காய்ச்சலால் சோர்ந்து போன உடலும் மீட்கப்படும்.
ஐஸ் ஒத்தகம் :
தலைவலியால் குழந்தைகள் துடித்தால் வலியை குறைக்க அவர்களின் நெற்றி, கழுத்து பகுதியில் ஐஸ் புத்தகம் கொடுக்கலாம். ஆனால் ஐஸ் கட்டி ஒத்தகம் நேரடியாக குழந்தையும் நெற்றியின் மீது வைக்கக் கூடாது. ஒரு மெல்லிய துணியை சுற்றி கொடுப்பதுதான் பாதுகாப்பானது. காய்ச்சல் வெப்பநிலையையும் குறைக்க உதவும்.
வலி நிவாரண மருந்துகள் :
குழந்தைகளுக்கு காய்ச்சலினால் வரும் தலைவலியை போக்க சில வலி நிவாரண மருந்துகள் உதவும் என்றாலும், மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் சுயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
குறிப்பு : குழந்தைகள் காய்ச்சலுடன் தீவிரமான தலைவலி, மங்கலான பார்வை, இரட்டை பார்வை போன்றவற்றை எதிர்கொண்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.