MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Head Lice in Kids : குழந்தைக்கு பேன் தொல்லையா? நிரந்தரமாக நீங்க ஈசியான டிப்ஸ்!

Head Lice in Kids : குழந்தைக்கு பேன் தொல்லையா? நிரந்தரமாக நீங்க ஈசியான டிப்ஸ்!

உங்கள் குழந்தைகள் தலையில் பேன், ஈறு தொல்லை அதிகமாக இருந்தால் அதை நிரந்தரமாக போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jul 31 2025, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : our own

பேன் நம் தலை முடியின் ஆரோக்கியத்தை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுவும் குறிப்பாக பள்ளி செல்லும் சிறுமைகளிடம் பேன் தொல்லை அதிகமாகவே இருக்கும். பேன் உள்ள நபரிடம் நெருங்கி பழகினால் நமக்கும் பேன் வரும் பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் அவர்கள் உடுத்தும் ஆடைகளை உடுத்தினாலோ அல்லது அவர்கள் அருகில் தூங்கினாலோ பேன் வர வாய்ப்பு அதிகம் உள்ளன. தலையை துவட்டும் துண்டு, தலையணை ஆகியவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ள கூடாது. இல்லையெனில் பேன் வர வாய்ப்பு உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Image Credit : our own

பேன் நம் தலையில் உருவாகும் ஒருவித சிறிய பூச்சி. சில சமயங்களில் இது கண் புருவத்திலும், இமைகளிலும் கூட வரும். இது நம் உடலில் இருந்து ரத்தத்தை உணவாக உறிஞ்சு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இதனால் உச்சந்தலையில் அரிப்பு. இத்தகைய சூழ்நிலையில், இந்த நவீன காலத்தில் தலையில் இருக்கும் பேனை போக்க லோஷன் ஷாம்பூக்கள் விற்பனையாகின்றன. சில சமயங்களில் அதிக வீரியம் உள்ள மருந்துகளை கூட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அவற்றிற்கு பதிலாக, இயற்கை முறையில் அவற்றை அளிக்க கூடிய சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

37
Image Credit : our own

டீ ட்ரி ஆயில்

தலையில் இருக்கும் பேனை அழிக்க இந்த ஆயில் சிறந்த தேர்வு. இதற்கு இந்த ஆயிலில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி அதை உங்களது உச்சந்தலையில் தெளித்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். சிறந்த பலன் பெற வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்யுங்கள்.

47
Image Credit : Getty

பூண்டு

பூண்டு சமையலுக்கு மட்டுமல்ல பேனை கொள்ளக்கூடிய சிறந்த ஆயுதமாகவும் கருதப்படுகிறது. இதற்கு மிக்ஸி ஜாரில் சுமார் 10 பூண்டு பற்கள் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சரி செய்வது பேஸ்ட் போல் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை உங்கள் குழந்தையின் உச்சந்தலையில் தடவி சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

57
Image Credit : Getty

வெங்காய சாறு

உங்கள் குழந்தையின் தலையில் இருக்கும் பேனை போக்க வெங்காய சாறு சிறந்த தேர்வாகும். இதற்கு வெங்காய சாற்றை குழந்தையின் தலையில் தடவி சுமார் 4 மணி நேரம் கழித்து சீப்பை கொண்டு வார வேண்டும். பிறகு ஷாம்பு போட்டு தலைமுடியை வாஷ் செய்ய வேண்டும். சிறந்த பலன்கள் பெற இந்த முறையை மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

67
Image Credit : our own

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் இருக்கும் அமிலத்தன்மை தலையில் இருக்கும் பேன் மற்றும் அதன் முட்டையை அழிக்க உதவும். இதற்கு ஒரு பிரஷ் உதவியுடன் எலுமிச்சை சாற்றை உச்சம் தலையில் நேரடியாக தடவலாம். பிறகு 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

77
Image Credit : social media

புதினா எண்ணெய்

உங்கள் குழந்தையின் தலையில் இருக்கும் பேனை நிரந்தரமாக போக்க அவர்களுக்கு பயன்படுத்தும் வழக்கமான ஷாம்புவில் சில சொட்டுக்கள் புதினா எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த முறையை நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் பேன் தொல்லை இருக்காது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
அழகு
பெற்றோர் ஆலோசனை
குழந்தைகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Related Stories
Recommended image1
Child Bone Strength : குழந்தைகள் எலும்புகள் பலவீனமா இருக்கா? உறுதியாக்க உதவும் சில டிப்ஸ்
Recommended image2
Child Growth Delay : வயசுக்கு ஏத்த மாதிரி உங்க குழந்தை வளரலயா? இந்த விஷயங்களை கவனிங்க!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved