MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • டயட் இல்லாம வெயிட் குறைக்கணுமா? நீங்க சாப்பிடுற முறையை மாத்துங்க!

டயட் இல்லாம வெயிட் குறைக்கணுமா? நீங்க சாப்பிடுற முறையை மாத்துங்க!

வாக்கிங், ஜிம் போன்ற பயிற்சிகள் இல்லாமல் எளிதாக உடல் எடையைக் குறைக்கணுமா? உங்களுக்காகவே சில எளிய வழிகள் உள்ளன. இவற்றை முயற்சித்துப் பார்த்தால், நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படுவதை நிச்சயம் காண்பீர்கள்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 06 2026, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இடது கையை பயன்படுத்துங்க!
Image Credit : Getty

இடது கையை பயன்படுத்துங்க!

என்னது கை மாத்தி சாப்பிடணுமா? ஆமாங்க! நீங்க வழக்கமாக வலது கையில் சாப்பிடுபவர் என்றால், இடது கையில் சாப்பிட முயற்சி செய்யுங்க. இது உங்களை மெதுவாகச் சாப்பிட வைக்கும். மூளைக்கு 'வயிறு நிறைந்து விட்டது' என்ற சிக்னல் கிடைக்க 20 நிமிடம் ஆகும். மெதுவாகச் சாப்பிடும் போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தானாகவே தடுத்து நிறுத்தப்படும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தட்டோட 'கலர்' ரொம்ப முக்கியம்
Image Credit : Getty

தட்டோட 'கலர்' ரொம்ப முக்கியம்

சிவப்பு, மஞ்சள் நிற தட்டுகள் பசியைத் தூண்டும் (அதான் ஹோட்டல்ல இந்த கலர் யூஸ் பண்றாங்க!). ஆனா, நீங்க நீல நிற (Blue) தட்டுகளைப் பயன்படுத்தி சாப்பிட்டுப் பாருங்க. அறிவியல் பூர்வமாக நீல நிறம் பசியைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். சாப்பாட்டின் அளவும் தானாகவே குறையும். சிம்பிள் சைக்காலஜி ட்ரிக் இது!

Related Articles

Related image1
Weight Loss Tips : இரவில் என்ன சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும்?
Related image2
Weight Loss Tips : எல்லாம் கரெக்டா செஞ்சும் உடல் எடை குறையவில்லையா? அப்ப இதான் காரணம்!
35
சாப்பாட்டுக்கு நடுவுல 'வாட்டர் பிரேக்'!
Image Credit : Getty

சாப்பாட்டுக்கு நடுவுல 'வாட்டர் பிரேக்'!

சாப்பிட உட்காருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னால் ஒரு பெரிய கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடியுங்கள். இது உங்க வயிற்றை ஓரளவுக்கு நிரப்பி, பேராசையோடு அதிக உணவு சாப்பிடுவதைத் தடுக்கும். அதே போல், ஒவ்வொரு காய் அல்லது சாதம் சாப்பிட்ட பிறகும் ஒரு சிப் தண்ணீர் குடிப்பது ஜீரணத்தை வேகமாக்கும்.

45
'மொபைல் மற்றும் டிவி'க்கு நோ என்ட்ரி!
Image Credit : Getty

'மொபைல் மற்றும் டிவி'க்கு நோ என்ட்ரி!

ரீல்ஸ் பார்த்துக்கிட்டே சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுறோம் என்றே தெரியாது! மொபைல், டிவியை ஆஃப் பண்ணிட்டு, உணவோட வாசனையையும் சுவையையும் ரசித்து, நல்லா மென்று சாப்பிடுங்க (Mindful Eating). இப்படி சாப்பிட்டால் குறைவான சாப்பாடே உங்களுக்கு அசாத்திய திருப்தியைக் கொடுக்கும்.

55
காய்கறி சூப் அல்லது சுவையான சாலட்
Image Credit : Getty

காய்கறி சூப் அல்லது சுவையான சாலட்

ஹெவியான சாப்பாட்டை எடுத்த உடனே சாப்பிடாதீங்க. ஃபர்ஸ்ட் ஒரு கப் காய்கறி சூப் அல்லது சுண்டைக்காய், வெள்ளரிக்காய் சாலட் சாப்பிடுங்க. அதுக்கப்புறம் மெயின் டிஷ் சாப்பிடும் போது, வயிறு சீக்கிரமே நிறைஞ்சிடும். இதனால் தேவையில்லாத கலோரிகளும் கார்ப்போஹைட்ரேட்டுகளும் உடம்பில் சேராது!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
உணவு
சுகாதார நன்மைகள்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cooking Oil: பஜ்ஜி, பூரி சுட்ட எண்ணெய் கறுப்பா இருக்கா? 1 நிமிஷத்துல இப்படி சுத்தம் பண்ணுங்க!
Recommended image2
underarm odor : அக்குள் துர்நாற்றத்தை தடுக்க 5 சீக்ரெட் வழிகள்
Recommended image3
உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும் 7 டிடாக்ஸ் வாட்டர் ரெசிப்பிகள்!
Related Stories
Recommended image1
Weight Loss Tips : இரவில் என்ன சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும்?
Recommended image2
Weight Loss Tips : எல்லாம் கரெக்டா செஞ்சும் உடல் எடை குறையவில்லையா? அப்ப இதான் காரணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved