MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு சீக்கிரம் ஜீரணமாகனுமா? சாப்பிட்டதும் இந்த '2' விஷயம் கட்டாயம் பண்ணுங்க!! 

உணவு சீக்கிரம் ஜீரணமாகனுமா? சாப்பிட்டதும் இந்த '2' விஷயம் கட்டாயம் பண்ணுங்க!! 

Improve Digestion After Food : சிறந்த ஆரோக்கியத்திற்காக சாப்பிட்ட பிறகு செரிமானத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்கே.

2 Min read
Author : Kalai Selvi
Published : Mar 05 2025, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
உணவு சீக்கிரம் ஜீரணமாகனுமா? சாப்பிட்டதும் இந்த '2' விஷயம் கட்டாயம் பண்ணுங்க!!

உணவு சீக்கிரம் ஜீரணமாகனுமா? சாப்பிட்டதும் இந்த '2' விஷயம் கட்டாயம் பண்ணுங்க!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளில் மூழ்கிருப்பதால் தங்களை கவனித்துக் கொள்ள கூட சரியாக நேரமில்லை. இதன் நேரடி தாக்கமானது ஆரோக்கியத்தில் தான் விழும். ஆயுள் நீடிக்க நாம் ஆரோக்கியமாக இருப்பது ரொம்பவே முக்கியம். மேலும் நாம் சாப்பிடும் உணவு நல்ல முறையில் செரிமானம் அடைவதும் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியம். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், வாழ்விருக்கும் சரியான செரிமானம் மிகவும் அவசியம். நாம் சாப்பிட்ட உணவை உடைத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு இது கடினமாக உழைக்கின்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
உணவுக்குப் பிறகு செரிமானத்தை மேம்படுத்துவது எப்படி?

உணவுக்குப் பிறகு செரிமானத்தை மேம்படுத்துவது எப்படி?

இருப்பினும் சில சமயங்களில் செரிமான செயல்முறையானது மெதுவாக அல்லது சங்கடமாக இருக்கும். நாம் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகாவிட்டால் இதனால் செரிமான அமைப்பு பலவீனமடையும். மேலும் உடல் தொடர்பான பல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் செரிமானத்தை மேம்படுத்தவும், சாப்பிட்ட உணவு விரைவில் ஜீரணமாக சாப்பிட்ட பிறகு சில விஷயங்களை செய்தால் போதும். அவை உங்களுக்கு சிறந்த செரிமானத்திற்கு உதவும்.

இதையும் படிங்க: அசிடிட்டி, மலச்சிக்கல் நொடியில் தீரணுமா? இந்த '1' டிப்ஸ் போதும்!!

36
குறுகிய நடைப்பயிற்சி

குறுகிய நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி செரிமானத்தை தூண்டுவதற்கு மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். எனவே நீங்கள் சாப்பிட்ட பிறகு குறுகிய நடைபயிற்சி செய்தால் செரிமான பாதையில் இருக்கும் தசைகளை செயல்படுத்தி வயிறு மற்றும் குடல் வழியாக உணவ இயக்கத்தை ஊக்குவிக்கும். எனவே, சுமார் 10-15 நிமிடங்கள் மற்றும் நடை பயிற்சி செய்தால் போதும். குறுகிய நடைபயிற்சி செய்வதன் மூலம் வயிற்று உப்புசத்தை குறைக்கலாம், செரிமான செயல்முறை மேம்படுத்தலாம் மற்றும் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவும்.

இதையும் படிங்க:  இந்த இடத்தில் எண்ணெய் தடவினால் போதும்! செரிமான பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு!

46
சூடான நீர் அல்லது மூலிகை டீ

சூடான நீர் அல்லது மூலிகை டீ

சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடான நீர் அல்லது ஏதாவது ஒரு மூலிகைக்கு குடிப்பதன் மூலம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க முடியும். ஏனெனில் சூடான பானங்கள் உணவை உடைக்க உதவுகிறது. இதன் மூலம் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கலாம். குறிப்பாக இஞ்சி டீ வீக்கம் மற்றும் குமட்டலை போக்க உதவுகின்றது.

சப்ளிமெண்ட்கள்

சில சமயங்களில் உணவை உடைக்க கூடுதல் உதவி தேவை இதற்கு நீங்கள் செரிமானத்திற்கான சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக நீங்கள் வீக்கம் அல்லது அசெளகரியம் அனுபவித்தால் சப்ளிமெண்ட்கள் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் இது கொழுப்புகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவற்றை மிகவும் திறமையாக கொடுக்க உதவுகிறது.

56
பழம் சாப்பிடலாம்

பழம் சாப்பிடலாம்

உணவுக்குப் பிறகு அன்னாசி பழம்,  பப்பாளி பழம் போன்ற ஏதாவது ஒரு சிறிய பழத்தை சாப்பிடலாம். ஏனெனில் இதை செரிமானத்தை ஆதரிக்கும். அன்னாசி பழத்தில் இருக்கும் பப்பேன் போன்ற இயற்கை நொதிகள் புரதத்தை உடைத்து, செரிமான செயல்முறை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் உணவுக்கு பிறகு ஏதாவது ஒரு பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் தடுக்கப்படும் மற்றும் குடல் இயக்கங்கள் முழுங்கப்படுத்தப்படும்.

புரோபயாடிக்குகள்

தயிர், போன்றவற்றில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. உணவுக்கு பிறகு புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். புரோபயாடிக்குகள் குடல் பாக்டீரியாக்களை சமநிலையை ஆதிரிக்கும். இதுதவிர, மலச்சிக்கல், வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது. 

66
ஆழ்ந்த சுவாசம்

ஆழ்ந்த சுவாசம்

மன அழுத்தம் இருந்தால் மெதுவான செரிமானம் ஏற்படும். எனவே செரிமானத்தை மேம்படுத்த சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் அல்லது தியானம் செய்ய வேண்டும். இதனால் மன அழுத்த அளவு குறையும் மற்றும் உங்களது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். இதனால் விரைவான செரிமான உண்டாகும்.

தூங்காதே!

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தூங்குவது தான். உணவுக்கு பிறகு தூங்கினால் செரிமான செயல்முறை மெதுவாக்கி, அசெளகரியத்திற்கு வழிவகுக்கும். இதனால் உணவு ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Rasam Vadai : ரசத்தில் ஊறிய மென்மையான ரச வடை..ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீங்க!
Recommended image3
Kambu Paal Urundai : கம்பு பால் உருண்டை ..தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved