ஒரே நொடியில் தலைவலி நீங்கும்!! சிறந்த வீட்டு வைத்தியம்
மருந்துகள் இல்லாமல் சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலம் தலைவலியை சுலபமாக போக்கிவிடலாம். அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Headache
தலைவலி என்பது நம் அனைவருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை. அதிக நேரம் கணினி முன் வேலை பார்ப்பது, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் கூட தலைவலி வரலாம். தலைவலி தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். வலியை தாங்க முடியாமல் பலர் தலைவலியை போக்க உடனே மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலருக்கு வலி நிவாரணி பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் மருந்துகள் இல்லாமல் தலைவலியிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தாமதிக்காமல் உடனே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மருதாணி
பொதுவாக மருதாணியை நாம் அரைத்து கை மற்றும் தலைமுடிக்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் அது தலைவலியையும் குறைக்க உதவும் தெரியுமா? இதற்கு மருதாணி இலையை இரவில் ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை குடித்தால் தலைவலி குறையும். ஒருவேளை உங்களுக்கு அப்படி பிடிக்கவில்லை என்றால் மருதாணிலையை பேஸ்ட் போலாக்கி தலையில் தடவுவதன் மூலம் தலைவலி குறைந்துவிடும். மருதாணி இலை தலைக்கு குளிர்ச்சியை அளிக்கும். இதனால் தலைவலி பிரச்சனை நீங்கிவிடும்.
வேப்பிலை
வேப்பிலை அவற்றில் இருக்கும் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. வேப்ப இலை எண்ணெய் தலைவலியை போக்க உதவுகிறது. வீட்டிலேயே வேப்ப எண்ணெயை தயாரிக்கலாம். இதற்கு தேங்காய் எண்ணெயில் வேப்ப இலைகளை ஊற வைத்து சிறிது நேரம் வெயிலில் வைத்து பிறகு அந்த எண்ணெயை தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கடைகளில் கூட வேப்ப எண்ணெய் விற்கப்படுகின்றன. வாங்கி பயன்படுத்துங்கள்.
கற்றாழை ஜெல்
கற்றாழை சரும பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். தலைவலியை போக்க கற்றாழை ஜெல்லை நெற்றியில் தடவ வேண்டும். வேண்டுமானால் இதில் 2 துளிகள் கிராம்பு எண்ணெய், 1 மஞ்சள் சேர்த்து கொள்ளலாம். இந்த பேஸ்ட்டை நெற்றியில் 20 நிமிடம் வைத்தால் தலைக்கு குளிர்ச்சியை தரும். இதனால் தலைவலி பறந்து போகும்.