Migraine headache: மைக்ரேன் தலைவலி.. தாங்க முடியாத இந்த வலிக்கு.. இப்படி ஒரு உடனடி தீர்வு இருக்கா?
ஒற்றைத் தலைவலி உங்களை பலவீனப்படுத்தும். இது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதைத் தவிர்ப்பதும், அதன் அறிகுறிகளும் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...
இப்போதெல்லாம் தலைவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பலர் ஒற்றைத் தலைவலியை (மைக்ரேன் தலைவலி) வெறும் தலைவலி என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒற்றைத் தலைவலிக்கும், தலைவலிக்கும் வித்தியாசம் உள்ளது. `மைக்ரேன்’ (Migraine) எனும் ஒற்றைத்தலைவலி நரம்பு சார்ந்த பிரச்சனையாகும். மைக்ரேன் தலைவலி மிக அதிகமாக இருக்கும். தாங்கமுடியாமல் அவதிப்பட நேரிடும். இதை முறையாக குறைக்கவில்லை என்றால் பல பிரச்சனைகள் வரலாம்.
ஒரு ஆய்வில், இந்திய மக்கள்தொகையில் 1 ஆண்டில் ஒற்றைத் தலைவலியின் பாதிப்பு கொண்டோரின் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. ஆண்களும், பெண்களும் பாரபட்சம் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் 18 முதல் 25 சதவீத பெண்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பெண்களுக்கே அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள்
ஒற்றைத் தலைவலி ஒரு புரோட்ரோமல் கட்டத்துடன் தொடங்குகிறது. இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கடுமையான சோர்வு, கொட்டாவி, வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களால் ஒளியைப் பார்க்க இயலாது, தலைச்சுற்றல், குழப்பம், சில சமயம் வயிற்று வலி கூட வரலாம். பொதுவாக 30 சதவீதம் பேருக்கு 15 முதல் 60 நிமிடங்களுக்கு இந்த வலி ஏற்படும். இது சில நேரங்களில் 3 நாட்கள் கூட நீடிக்கும். இந்த நோய் பாதித்தோருக்கு தூக்கம் பாதிக்கும். தலைவலி அறிகுறிகள் குறைந்த பிறகு நோயாளி பலவீனமடைகிறார்.
பாதிப்பு
இது 20 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெரியவர்களுக்கும் இந்த நோய் அதிகம் வரலாம். ஒற்றைத் தலைவலிக்குப் பிறகு திடீரென கடுமையான தலைவலி இருந்தால் மூளையில் ஸ்கேன் செய்து மருத்துவரை அணுக பரிந்துரைக்கப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
இதையும் படிங்க: Watermelon: வெயில் நேரத்தில் சூட்டை தணிக்க தர்பூசணி.. ஆனால் இந்த 3 உணவுகளோடு மட்டும் சாப்பிடாதீங்க!
ஒற்றை தலைவலி தீர்வு
காபி, சாக்லேட் ஆகியவற்றையும், உங்களுடைய மன அழுத்தத்தையும் குறைத்தாலே இந்த தலைவலி குறையும். ஃப்லூனாரிஸின் (Flunarizine), ஸ்டெமெட்டில் (Stemetil), கிரெனில் (Grenil) ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் மருத்துவரிடம் ஆலோசிப்பது சிறந்தது. ஆயுர்வேதத்தின்படி, நல்லெண்ணெய், தும்பைப் பூ, கொஞ்சம் மிளகுத் தூள், ஓமம் ஆகியவை காய்த்து குளிக்கலாம். இந்த எண்ணெய் குளியல் ஒற்றைத் தலைவலியை போக்கும்.
இதையும் படிங்க: ரோஸ்வாட்டருக்குள் இவ்வளவு ரகசியங்களா? ஒரே நாளில் முகம் பளிச்சுன்னு பேரழகு பெற.. சிம்பிள் பேஸ் பேக் ரெடி