Eye care routine : வசீகரிக்கும் அழகிய கண்களை பெற என்ன செய்யலாம்?
ஒருவருடைய முகத்தில் முதலில் ஈர்ப்பது அவர்களுடைய கண்கள்தான். டல்லான கண்கள், கருவளையம், வீக்கம் இதெல்லாம் இருந்தா முகத்தோட அழகே கெட்டுப்போயிடும். கெமிக்கல் கலந்த ஐ-கீரீம்கள் இல்லாமல், நேச்சுரலா கண்களை காந்தம் போல வசீகரிக்க வைக்க சில சூப்பர் டிப்ஸ் இதோ!

'கிரீன் டீ' ஐஸ் க்யூப் மசாஜ்:
கிரீன் டீ போட்டு குடிச்ச அப்புறம் அந்த பேகை தூக்கி போடாதீங்க. கிரீன் டீ தண்ணீரை ஐஸ் டிரேயில் ஊற்றி ஐஸ் கட்டியாக்குங்கள். காலையில் எழுந்ததும் இந்த கிரீன் டீ ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களைச் சுற்றி 2 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். கண்களின் வீக்கம் (Puffiness) குறைந்து, கண்கள் உடனே பிரகாசமாகும்.
பன்னீர் - தக்காளி' மேஜிக் பேக்:
தக்காளி சாறு அரை ஸ்பூன், ஒரிஜினல் பன்னீர் (Rose Water) ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதில் பஞ்சை (Cotton pad) நனைத்து கண்களின் மேல் 10 நிமிடம் வையுங்கள். தக்காளியின் பிளீச்சிங் தன்மையும், பன்னீரின் குளுமையும் சேர்ந்து கருவளையத்தை அடியோடு காலி பண்ணிடும்.
விரல்களால் '20-20-20' தவம்:
கம்ப்யூட்டர், மொபைல் பார்த்து கண்கள் டயர்ட் ஆகிடுதா? 20 நிமிடத்திற்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பச்சை நிறப் பொருளை 20 வினாடிகள் உற்றுப் பாருங்கள். பிறகு கைகளை நன்றாகத் தேய்த்து, அந்த மிதமான சூட்டை கண்களின் மேல் வையுங்கள். கண்களுக்குள் ரத்த ஓட்டம் பாய்ந்து, கண்கள் எப்போதும் "கிரிஸ்டல் கிளியராக" இருக்கும்.
விளக்கெண்ணெய் - பாதாம் ஆயில்' ஐலாஷ் சீரம்:
கண்கள் அழகாக தெரிய அடர்த்தியான கண் இமைகள் (Eyelashes) முக்கியம். சம அளவு விளக்கெண்ணெய் (Castor oil) மற்றும் பாதாம் ஆயிலை கலந்து ஒரு சின்ன பாட்டிலில் வையுங்கள். தினமும் தூங்குவதற்கு முன், காது குடையும் பட்ஸ் (Earbuds) பயன்படுத்தி இதை இமைகளின் வேர்களில் தடவி வாருங்கள். சில வாரங்களில் இமைகள் அடர்த்தியாகி, கண்கள் காந்தம் போல் மாறும்.
'வெந்தயக் கீரை' ரகசியம்:
கண்கள் வெளியிலிருந்து மட்டும் அழகாக இருந்தால் போதாது, உள்ளிருந்தும் ஜொலிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் உணவில் வெந்தயக்கீரை அல்லது முருங்கைக் கீரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலிருக்கும் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து, கண்களின் வெள்ளைப்பகுதியை மஞ்சளாக மாறாமல், நல்ல பளபளப்பான வெள்ளை நிறத்தில் வைத்திருக்க உதவும்.

